தமிழகம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி ஜன.6 முதல் ஜாக்டோ - ஜியோ காலவரையற்ற வேலைநிறுத்தம்

செய்திப்பிரிவு

சென்னை: பழைய ஓய்​வூ​திய திட்​டம் உள்பட 10 அம்ச கோரிக்​கைகளை வலி​யுறுத்தி ஜன.6 முதல் கால​வரையற்ற வேலைநிறுத்​தப் போராட்​டத்​தில் ஈடு​படப்​போவ​தாக ஜாக்டோ ஜியோ கூட்​டமைப்பு அறி​வித்​துள்​ளது.

அரசு ஊழியர்​களுக்கு பங்​களிப்பு ஓய்​வூ​திய திட்​டத்தை ரத்து செய்​து​விட்டு மீண்​டும் பழைய ஓய்​வூ​தியத் திட்​டத்தை அமல்​படுத்​து​வது, அரசு துறை​களில் காலி​யாக உள்ள லட்​சக்​கணக்​கான பணி​யிடங்​களை நிரப்​புவது ஊதி​யக்​குழு முரண்​பாடு​களை களைவது, சிறப்​புக் கால​முறை, தொகுப்​பூ​தி​யம், மதிப்பூ​தி​யத்​தில் பணி​யாற்​றும் ஊழியர்​களுக்கு கால​முறை ஊதி​யம் வழங்​கு​வது உள்​ளிட்ட 10 அம்ச கோரிக்​கைகளை வலி​யுறுத்தி அரசு ஊழியர்- ஆசிரியர் சங்​கங்​களின் கூட்​டமைப்​பான ஜாக்டோ ஜியோ சார்​பில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.

இக்​கோரிக்​கைகளை வலி​யுறுத்தி கடந்த நவ.18-ம் தேதி ஒரு​நாள் அடை​யாள வேலைநிறுத்​தப் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். இந்​தச் சூழலில் ஜாக்​டோ-ஜியோ மாநில ஒருங்​கிணைப்​பாளர்​கள் கூட்​டம் சென்னை​யில் தமிழ்​நாடு அரசு ஊழியர் சங்க அலு​வல​கத்​தில் நேற்று நடைபெற்​றது. ஒருங்​கிணைப்​பாளர்​கள் மு.​பாஸ்​கரன், சே.பிர​பாகரன், இலா.​தி​யோடர் பாஸ்​கரன் ஆகியோர் தலை​மை​யில் நடந்த இக்​கூட்​டத்​தில் அடுத்​தக்​கட்ட போராட்​டம் குறித்து விரி​வாக ஆலோ​சிக்​கப்​பட்​டது.

கூட்​டம் முடிவடைந்த பிறகு மாநில ஒருங்​கிணைப்​பாளர் பிர​பாகரன் செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது,“தி​முக​வின் தேர்​தல் வாக்​குறு​தி​களை நிறைவேற்ற வலி​யுறுத்தி வட்​டார அளவில் பிரச்​சார இயக்​க​மும், டிச.13-ம் தேதி மாவட்ட தலைநகரங்​களில் உரிமை மீட்பு உண்​ணாநிலை போராட்​ட​மும் நடை​பெறும்.

இதைத்​தொடர்ந்து டிச.27-ல் மாவட்ட தலைநகரங்​களில் வேலைநிறுத்த ஆயத்த மாநாடும் அதன் தொடர்ச்​சி​யாக ஜன.6 முதல் கால​வரையற்ற வேலைநிறுத்​தப் போ​ராட்​ட​மும்​ நடை​பெறும்​” என்​றார்​.

SCROLL FOR NEXT