தமிழகம்

பாண்டியன், நெல்லை உள்ளிட்ட முக்கிய ரயில்களில் தீபாவளி டிக்கெட் முன்பதிவு 5 நிமிடங்களில் நிறைவு

இணையதளம் முடங்கியதால் பயணிகள் ஏமாற்றம்

செய்திப்பிரிவு

சென்னை: தீ​பாவளி பண்​டிகைக்​காக, சென்​னை​யில் இருந்து நவ.5-ம் தேதி சொந்த ஊர்​களுக்கு செல்​வதற்​காக, ரயில் டிக்​கெட் முன்​ப​திவு நேற்று தொடங்​கியது. பாண்​டியன், நெல்​லை, பொதிகை உள்பட முக்​கிய ரயில்​களில் 5 நிமிடங்​களில் 2-ம் வகுப்பு தூங்​கும் பெட்​டிகளில் முன்​ப​திவு முடிந்​து, காத்​திருப்​போர் பட்​டியல் காட்​டியது.

தீபாவளி பண்​டிகை வரும் நவ.8-ம் தேதி (ஞா​யிற்​றுக்​கிழமை) கொண்​டாடப்​படு​கிறது. ரயில் டிக்​கெட் முன்​ப​திவை பொருத்​தவரை 60 நாட்​களுக்கு முன்பே முன்​ப​திவு செய்​யும் வசதி உள்​ளது. அந்​தவகை​யில், பண்​டிகைக்கு சில நாட்​கள் முன்​பாக, நவ.5-ம் தேதி அன்று சென்​னை​யில் இருந்து விரைவு ரயில்​களில் புறப்​படு​வதற்கு வசதி​யாக, டிக்​கெட் முன்​ப​திவு நேற்று காலை 8 மணிக்கு தொடங்​கியது. ஐ.ஆர்​.சி.டி.சி இணை​யதளம் வழி​யாக​வும், ரயில் டிக்​கெட் முன்​ப​திவு மையங்​கள் மூல​மாக​வும் டிக்​கெட் முன்​ப​திவு நடை​பெற்​றது.

சென்​னை​யில் இருந்து தென் மாவட்​டங்​களுக்கு புறப்​படும் முக்​கிய விரைவு ரயில்​களில் 2-ம் வகுப்பு தூங்​கும் வசதி பெட்​டிகளில் டிக்​கெட் முன்​ப​திவுமுடிந்து அடுத்​தடுத்து 5 நிமிடங்​களில் காத்​திருப்​போர் பட்டியல் காட்​டியது.

சென்​னை​யில் இருந்​து, மதுரை, தென்​காசி, திருநெல்​வேலி, தூத்​துக்​குடி, நாகர்​கோ​வில் ஆகிய ஊர்​களுக்கு முறையே புறப்​படும் பாண்​டியன், பொதி​கை, நெல்​லை, முத்​துநகர், கன்​னி​யாகுமரி ஆகிய ரயில்​களில் விரைவு ரயில்​களின் 2-ம் வகுப்பு தூங்​கும் வசதி பெட்​டிகளில், டிக்​கெட் முன்​ப​திவு சில நிமிடங்​களில் முடிந்​து, காத்​திருப்​போர் பட்​டியல் காட்​டியது.

குறிப்​பாக, பாண்​டியன், பொதி​கை, நெல்​லை, முத்​துநகர், கன்​னி​யாகுமரி, அனந்​த​புரி (தென் மாவட்​டங்​கள் வழி​யாக திரு​வனந்​த​புரம் செல்​லும் விரைவு ரயில்) ஆகிய விரைவுர​யில்​களில் ஞாயிற்​றுக்​கிழமை காலை​யிலேயே காத்​திருப்​போர் பட்​டியல் பதி​வும் முடிந்​து, “ரெக்​ரெட்” என்று வந்​தது.

இது​போல, மத்​திய மாவட்​டங்​களுக்கு புறப்​படும் மலைக்​கோட்​டை, மேற்கு மாவட்​டங்​களுக்கு புறப்​படும் சேரன், நீல​கிரி ஆகிய விரைவு ரயில்​களி​லும் 2-ம் வகுப்பு தூங்​கும் வசதி பெட்​டிகளுக்கு டிக்​கெட் முன்​ப​திவு முடிந்​து, காத்​திருப்​போர் பட்​டியல் காட்​டியது. முக்​கிய ரயில்​களில் ஏசி பெட்​டிகளி​லும் டிக்​கெட் முன்​ப​திவு நிறைவடைந்​தது.

பகல் நேரத்​தில் திருச்​சி, மதுரைக்கு முறையே புறப்​படும் சோழன், வைகை ஆகிய​விரைவு ரயில்​களில் இரண்​டாம் வகுப்பு சிட்​டிங் இடங்​கள் நிறைவடைந்து காத்​திருப்​போர் பட்​டியல் வந்​தது.

அதே​நேரத்​தில், சென்​னை​யில் இருந்து நாகர்​கோ​விலுக்கு புறப்​படும் வந்​தே​பாரத் ரயில், கோவைக்கு புறப்​படும் கோவை விரைவு ரயில், கோவை இன்​டர் சிட்டி ரயில்​களில் சில இடங்​கள் இருந்​தன.

இருப்​பினும் தென் மாவட்​டங்​களுக்கு புறப்​படும் முக்​கிய ரயில்​களில் டிக்​கெட் முன்​ப​திவு செய்​ய​முடி​யாமல் பொது​மக்​கள் கடும் அவதிப்​பட்​டனர். ஐஆர்​டிசிடி இணை​யதளம் மூல​மாக, நேற்று காலை டிக்​கெட் முன்​ப​திவு செய்ய முயன்ற பெரும்​பாலான மக்​களுக்கு ஏமாற்​றமே மிஞ்​சி​யது.

ஐஆர்​சிடிசி இணை​யதளம் மேம்​படுத்​தப்​பட்​டுள்​ள​தாக​வும், எனவே எளி​தாக​வும் விரை​வாக​வும் முன்​ப​திவு செய்ய முடி​யும் என்று தெரிவிக்​கப்​பட்​டிருந்​தது.

ஆனால், இணை​யதளத்​தில் காலை 9.30 மணி வரை உள்ளே சென்று முன்​ப​திவு செய்​யவே முடி​யாத நிலை ஏற்​பட்​ட​தாக​வும்​, காலை 8 மணிக்​கே சர்​வர்​ முடங்​கி விட்​ட​தாக​வும்​ பயணி​கள்​ குற்​றம்​ ​சாட்​டினர்.

SCROLL FOR NEXT