செல்வப்பெருந்தகை

 
தமிழகம்

செல்வப்பெருந்தகை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: காவல் ஆணையரிடம் வருமான வரித்துறை புகார்

செய்திப்பிரிவு

சென்னை: தவறான தகவல்​களை வெளி​யிட்ட செல்​வப்​பெருந்​தகை மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும் என சென்னை காவல் ஆணை​யரிடம் வரு​மான வரித்​துறை புகார் தெரி​வித்​துள்​ளது.

இதுதொடர்​பாக மத்​திய நிதி அமைச்​சகத்​தின் வரு​வாய்த் துறை மத்​திய நேரடி வரி​கள் வாரி​யம் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது:

தமிழக காங்​கிரஸ் தலை​வரும் பெரும்​புதூர் சட்​டப்​பேரவை தொகுதி வேட்​பாள​ரு​மான செல்​வப்​பெருந்​தகை கடந்த 20-ம் தேதி ‘எக்​ஸ்’ வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதிவு ஒன்று வரு​மான வரித்​துறை​யின் கவனத்​துக்கு வந்​துள்​ளது.

அதில், ‘வரு​மான வரித்​துறை அதி​காரி​கள் சோதனை’ என்ற பெயரில், தன்​னைத் தொகு​திக்​குள் சட்​ட​விரோத​மாக அடைத்து வைத்​த​தாக​வும், தனது அரசி​யல் பணி​களைச் செய்​வதற்​கும் தேர்​தல் தொடர்​பான நடவடிக்​கை​களில் பங்​கேற்​ப​தற்​கும் தடை​யாக இருந்​த​தாக​வும் அவர் குற்​றம்சாட்​டி​யிருந்​தார்.

இதே குற்​றச்​சாட்​டு​களை அவர் அன்​றைய தினம் செய்​தி​யாளர் சந்​திப்​பின் போதும் மீண்​டும் தெரி​வித்​திருந்​தார். மேலும், சென்னை கீழ்ப்​பாக்​கத்​தில் உள்ள செல்​வப்​பெருந்​தகை இல்​லத்​தில் வரு​மான வரித்​துறை​யினர் சோதனை நடத்​தி​ய​தாக சில ஊடகங்​களும் செய்தி வெளி​யிட்​டிருந்​தன. இந்த தகவல்​கள் ஆய்வு செய்​யப்​பட்​டது.

குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை: இதில் கூறப்​பட்​டுள்ள குற்​றச்​சாட்​டு​கள் முற்​றி​லும் ஆதா​ரமற்​றவை மற்​றும் உண்​மையற்​றவை. கடந்த 20-ம் தேதி அன்றோ அல்​லது அதற்கு சமீபத்​திய தேதி​களிலோ செல்​வப்​பெருந்​தகைக்கு எதி​ராக வரு​மான வரித்​துறை​யின​ரால் எந்​த​வித​மான சோதனையோ ஆய்வோ அல்​லது அமலாக்க நடவடிக்​கைகளோ மேற்​கொள்​ளப்​பட​வில்லை என்​பதை தெளிவுபடுத்​துகிறோம்.

மேலும், அவரது நடமாட்​டத்​தைக் கட்​டுப்​படுத்​தும் வகை​யில் எவ்​வித நடவடிக்​கை​யும் எடுக்​கப்​பட​வில்​லை. சென்னை கீழ்ப்​பாக்​கத்​தில் உள்ள அவரது இல்​லம் உட்பட எந்​தவொரு இடமும், வரு​மானவரித் துறை​யின் நடவடிக்​கைகளுக்கு உட்​படுத்​தப்​பட​வில்​லை. கணக்​கில் வராத பணம் கொண்டு செல்​லப்​படு​வ​தாகக் கிடைத்த குறிப்​பிட்ட உளவுத் தகவல்​களின் அடிப்​படை​யில் ஸ்ரீபெரும்​புதூரின் சில பகு​தி​களில் வரு​மானவரித் துறை​யின​ரால் மேற்​கொள்​ளப்​பட்ட வரம்​புக்​குட்​பட்ட சரி​பார்ப்​புப் பணி​கள் முறை​யான அதி​காரி​களு​டன் ஒருங்​கிணைந்து மேற்​கொள்​ளப்​பட்​டன.

இதற்​கும் செல்​வப்​பெருந்​தகைக்​கும் எந்​தத் தொடர்​பும் இல்​லை. இந்​தச் சரி​பார்ப்பு நடவடிக்​கை​களில் மேல் நடவடிக்கை எடுப்​ப​தற்​கான ஆதா​ரங்​கள் ஏதும் கிடைக்​க​வில்​லை. மேலும் இந்த நடவடிக்கை தனிப்​பட்ட முறை​யில் எவரை​யும் பாதிக்​க​வில்​லை. செல்​வப்​பெருந்​தகை கூறி​யுள்ள தவறான மற்​றும் தவறாக வழிநடத்​தக்​கூடிய தகவல்​கள் குறித்து இந்​தி​யத் தேர்​தல் ஆணை​யத்​திடம் அறிக்கை சமர்ப்​பிக்​கப்​பட்​டுள்​ளது.

கூடு​தலாக தவறான தகவல்​களைப் பரப்​பியது மற்​றும் அரசுத் துறை மீது அவதூறான குற்​றச்​சாட்​டு​களைச் சுமத்​தி​யது தொடர்​பாக உரிய நடவடிக்கை எடுக்க கோரி சென்னை காவல் ஆணை​யரிடம் புகார் அளிக்​கப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு செய்​திக்​குறிப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT