தமிழகம்

பள்ளிகளில் விண்வெளி பாடம் இடம் பெற வேண்டும்: இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் யோசனை

செய்திப்பிரிவு

சென்னை: பள்ளி அறி​வியல் பாடத்​தில் விண்வெளி தொடர்​பான பாடமும் இடம்​பெற வேண்​டும் என்று இஸ்ரோ தலை​வர் வி.நாராயணன் யோசனை தெரி​வித்​தார்.

விண்​வெளிக்​குச் சென்ற முதல் மனிதர் ரஷ்யாவை சேர்ந்த யூரி காகரின் ஆவார். ரஷ்ய நாட்​டின் நிதி​யுத​வியுடன் சென்னை கோட்​டூர்​புரத்​தில் உள்ள தமிழ்​நாடு அறி​வியல் மற்​றும் தொழில்​நுட்ப மைய வாளகத்​தில் யூரி காகரின் மார்​பளவு சிலை நிறு​வப்​பட்​டுள்​ளது.

அம்​மையத்​தின் செயல் இயக்​குநர் கே.சண்​முக சுந்​தரம் தலை​மையில் நேற்று நடை​பெற்ற விழா​வில், இஸ்ரோ தலை​வர் நாராயணன், சென்​னை​யில் உள்ள ரஷ்ய துணைத் தூதர் வலேரி கோட்​சேவ் ஆகியோர் இணைந்து யூரி காகரி​னின் சிலை​யைத் திறந்து வைத்​தனர்.

இதைத் தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவி​களு​டன் நாராயணன் கலந்​துரையாடினார். அப்​போது அவர் கூறிய​தாவது: இந்​தி​யாவின் விண்​வெளி பயணத்​தில் சோவியத் யூனியன் முக்​கியப் பங்​காற்றி உள்​ளது.

இந்​திய விண்​வெளி வளர்ச்​சிக்கு ரஷ்யா அளித்த உதவியை இந்த நேரத்​தில் நன்​றியுடன் நினைவு​கூர்​கிறேன். ஒருகாலத்​தில் விண்​வெளித் தொழில்​நுட்​பத்​துக்​காகப் பிற நாடுகளைச் சார்ந்​திருந்த இந்​தியா, தற்​போது மற்ற நாடுகளின் விண்​வெளித் துறை வளர்ச்​சிக்​கும் உதவி செய்​யும் அளவுக்கு முன்​னேறியுள்​ளது. இவ்​வாறு அவர் கூறினார்.

முன்​னதாக இஸ்ரோ தலை​வர் நாராயணன் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: விண்​வெளிக்கு மனிதர்​களை அனுப்​பும் திட்​டம் தற்​போது அதி​களவில் நடை​பெற்று வரு​கிறது. 1969-ம் ஆண்டு நில​வில் மனிதன் காலடி எடுத்து வைத்​தான். அடுத்து விண்​வெளிக்கு மனிதர்​களை அனுப்ப உள்​ளனர்.

ஆனாலும் முதன்​முதலில் விண்​வெளிக்​குச் சென்று வந்​தவர் யூரி காகரின். இந்​தி​யாவிலும் விண்​வெளிக்கு மனிதர்​களை அனுப்​பும் ககன்​யான் திட்​டம் செயல்​படுத்​தப்​பட உள்​ளது.

பள்​ளி​களில் அறி​வியல் பாடங்​களு​டன் விண்​வெளி தொடர்பான பாடங்​கள் இடம்பெற வேண்டும். அவற்றைக் கொண்டு வந்​தால் மிகவும் நன்​றாக இருக்​கும்.

மழை தொடர்​பான விவரங்​களைக் கணிக்க வேண்​டும் என்​றால் நிறைய தரவு​கள் தேவைப்​படும். அது அந்த துறை​யில் பணி​யாற்​று​பவர்​களால் மட்​டுமே முடியும்.

மழை பெய்​வதை முன்​கூட்​டியே கணிப்​பது, தட்​பவெப்ப நிலை​யைச் சரியாக கணிப்​பது போன்ற பணிகள் வானிலை துறைக்​குரியவை. அவர்​களுக்கு தேவை​யான தரவு​களை செயற்​கைக்​கோள் மூலம் இஸ்ரோ வழங்​கு​கிறது.. இவ்​வாறு அவர் கூறினார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT