தமிழகம்

ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்கு தொடர அனுமதி பெறாமல் இழுத்தடிப்பதா? - உயர் நீதிமன்ற நீதிபதி கண்டனம்

செய்திப்பிரிவு

சென்னை: ஊழலை ஒழிப்​ப​தாக மைக் முன்​பாக பேசி​னால் மட்​டும் போதாது: அதற்​கான நடவடிக்​கை​யை​யும் எடுக்க வேண்​டும் என கருத்து தெரி​வித்​துள்ள சென்னை உயர்நீதி​மன்ற நீதிபதி என்​.ஆனந்த்வெங்​கடேஷ், முன்​னாள் அமைச்​சர் எஸ்​.பி.வேலுமணிக்கு எதி​ரான வழக்​கில் குற்​றம் சாட்​டப்​பட்ட 2 ஐஏஎஸ் அதி​காரி​களுக்கு எதி​ராக வழக்​குத்​ தொடர அனு​மதி பெறாமல் ஆண்டுக்​கணக்​கில் இழுத்​தடித்து வரு​வ​தாக கண்​டனம் தெரி​வித்​துள்​ளார்.

அதி​முக முன்​னாள் அமைச்​ச​ரான எஸ்​.பி.வேலுமணி, முந்​தைய அதி​முக ஆட்​சி​யில் உள்​ளாட்​சித் ​துறை அமைச்​ச​ராக பதவி வகித்​த​போது கோவை, சென்னை மாநக​ராட்​சிகளில் பல்​வேறு பணி​களுக்கு ஒப்​பந்​தங்​கள் வழங்​கிய​தில் ரூ.98.25 கோடி அளவுக்கு முறை​கேடு​கள் நடந்​துள்​ள​தாக லஞ்ச ஒழிப்​புத்​துறை போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்​துள்​ளனர்.

இந்த வழக்​கில் உயர்நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தர​வுப்​படி குற்​றப்​பத்​திரிகை தாக்​கல் செய்​ய​வி்ல்லை எனக் கூறி லஞ்ச ஒழிப்​புத் ​துறைக்கு எதி​ராக அறப்​போர் இயக்​கம், சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் அவம​திப்பு வழக்கு தொடர்ந்​திருந்​தது.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்​கடேஷ் முன்​பாக நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, வழக்​கில் குற்​றம்​சாட்​டப்​பட்ட 2 ஐஏஎஸ் அதி​காரி​களான கந்​த​சாமி, விஜய கார்த்​தி​கேயன் ஆகியோ​ருக்கு எதி​ராக வழக்கு தொடர அனு​மதி கோரி கடந்த ஆண்டு நவம்​பரில் அனுப்​பிய கடிதம் இன்​னும் மத்​திய அரசிடம் நிலு​வை​யில் இருப்​ப​தாக தமிழக அரசு தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது.

அதற்கு கடும் கண்​டனம் தெரி​வித்த நீதிப​தி, “இந்த வழக்​கில் நான் யாரை​யும் சும்மா விட​மாட்​டேன். 2 ஐஏஎஸ் அதி​காரி​களுக்கு எதி​ராக வழக்கு தொடரஅனு​மதி பெறு​வ​தில் இன்​னும் எத்​தனை நாட்​களாக இதே காரணத்தை திரும்​பத் திரும்ப சொல்​லிக்​கொண்டு இருப்​பீர்​கள்.

எனவே, அடுத்த விசா​ரணை​யின்​போது இந்த வழக்​கின் நிலை குறித்த ஆவணங்​களு​டன் மாநில அரசு தலைமை குற்​ற​வியல் வழக்​கறிஞர் ஆஜராக வேண்​டும்” எனக் கூறி விசா​ரணையை ஜூலை 17-ம் தேதிக்குதள்​ளி​வைத்​தார்.

மேலும், “ஊழலை ஒழிப்​ப​தாக மைக் முன்​பாக அனை​வரும் பேசுகின்​றனர். அப்​படி பேசி​னால் மட்​டும் போதாது. அதற்​கான நடவடிக்​கைகளை​யும் எடுக்க வேண்​டும்.

தங்​களை யாரும் தொட முடி​யாது என அனைத்து அரசி​யல்​வா​தி​களும் நினைக்​கின்​றனர். இந்த குற்​றம் நடந்து தற்​போது 2 தேர்​தல்​கள் முடிந்​து​விட்​டன. வழக்​கில்​ குற்​றம்​ ​சாட்​டப்​பட்​ட​வரை மக்​கள்​ மீண்​டும்​ தேர்​ந்​தெடுத்​துள்​ளனர்​” எனவும்​ நீதிப​தி கருத்​து தெரி​வி்த்​​தார்​.

SCROLL FOR NEXT