மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் உபயதாரர்கள், அரசியல் கட்சியினர், முக்கிய விஐபிகளுக்கே ‘பாஸ்’களை வாரி வழங்க திட்டமிடப்பட் டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் கோயில் நிர்வாகம், அமைச்சர், எம்எல்ஏ-க்கள் தரப்பினரிடையே இணக்கம் இல்லாத சூழலால் ‘பாஸ்’ விநி யோகத்தில் பெரும் குளறுபடி ஏற்பட்டுள்ளது.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா செப்.17-ம் தேதி வெகு விமரிசையாக நடைபெறுகிறது. கோயில் நிதி மற்றும் உபயதாரர்கள் நிதியில் குடமுழுக்கு விழா ரூ.28 கோடி செலவிலும், வீரவசந்தராயர் மண்டப சீரமைப்புப் பணிகள் ரூ.35 கோடி மதிப்பில் உட்பட மொத்தம் ரூ.63 கோடி மதிப்பில் குடமுழுக்கு விழா பணிகள் நடந்து வருகி்ன்றன.
குட முழுக்கு விழாவில், உபயதாரர்கள் 4 ஆயிரம் பேர் உட்பட முக்கிய விஐபிக்கள் சேர்த்து மொத்தம் 9 ஆயிரம் பேரை கோயிலுக்குள் அனு மதிக்க முடிவெடுக்கப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் குட முழுக்கு விழாவுக்குரிய விஐபிக்களுக்கான ‘பாஸ்’களை வழங்குவதில், கோயில் நிர்வாகம், அறங்காவலர் குழுத்தலைவர் மற்றும் அறங்காவலர் கள் தரப்பினருக்கும், அமைச்சர் நிர்மல்குமார், எம்எல்ஏ-க்கள் தரப்பினருக்கும் இணக்கமான சூழல் இல்லாததால் ‘பாஸ்’கள் வழங்குவதில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சர்கள், எம்எல்ஏ-க் கள், அறங்காவலர்கள் மற்றும் அதிகாரிகள், காவல்துறையினர் ‘பாஸ்’களை விநியோகித்து அவர்களும், அவர்கள் குடும்பத்தினரும் பெரும் திரளாக வந்தால் முழுக்க முழுக்க குடமுழுக்கு விழா விஐபிக்களுக்கான விழாவாக மட்டுமே மாறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே சித்திரைத் திருவிழாவில் நடக்கும் திருக்கல்யாண வைபவத்தில் ஆண்டுதோறும் விஐபிக்கள் மட்டுமே பெருமளவில் பங்கேற்பதும், சாமானிய பக்தர்கள் பங்கேற்க முடியாமல் பாதிக்கப்படுவதும் வாடிக்கையாக உள்ளது.
தற்போது குடமுழுக்கு விழா விலும் அதே அரசியல் தொடர வாய்ப்புள்ளதால், உள்ளூரில் நடக்கும் மிகப்பெரிய விழாவில் நேரில் பங்கேற்க ஆவலுடன் காத்திருக்கும் பக்தர்கள், பொதுமக்கள் யாரை அணுகுவது எனத் தெரியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து இந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கத்தின் மாநிலப் பொருளாளர் ஆதிசேஷன் கூறியதாவது: இறைவன் முன்பு அனைவரும் சமம் என்ற கொள்கைப்படி குடமுழுக்கு விழாவில் பக்தர்களை அனுமதிக்க வேண்டும்.
சுவாமி, அம்மன் தங்கக் கோபுரம் மேல்தளத்தில் முக்கிய விஐபிக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதாக தகவல் உள்ளது. திருப்பணிகளுக்கு உதவிய உபயதாரர்களுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும். இதில் மோசடி நடக்காமல் கோயில் நிர்வாகம் தடுக்க வேண்டும்.
சாமானிய பக்தர்கள் , மாற்றுத்திறனாளிகளையும் அனுமதிக்க வேண்டும். சித்திரைத் திருவிழா திருக் கல்யாணத்துக்கு கட்டண தரிசனம், இலவச தரிசனம் என்பதுபோல், குடமுழுக்கு விழாவில் சாமானிய பக்தர் களையும் அனுமதிக்க வேண் டும். அதற்கு வெளிப்படைத் தன்மையுடன் கோயில் நிர்வாகம் நடந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்