எஸ்.காமராஜ் எம்எல்ஏ

 
தமிழகம்

தவெகவில் இணைய முடிவா? - மன்னார்குடி எம்எல்ஏ விளக்கம்

செய்திப்பிரிவு

திருவாருர்: தவெகவில் இணைவது குறித்து எந்த நெருக்​கடியும் இல்லை எனவும், அரசி​யல் முடிவை நேரம் வரும்​போது அறி​விப்​பேன் எனவும் மன்​னார்​குடி எம்​எல்ஏ எஸ்.காம​ராஜ் தெரி​வித்​தார்.

மன்​னார்​குடி​யில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: மன்​னார்​குடி சுற்​று​வட்​டச் சாலைக்கு ரூ.46 கோடி ஒதுக்​கி​யுள்ள தமிழக அரசுக்கு நன்றி தெரி​வித்​துக் கொள்​கிறேன்.

மன்​னார்​குடி​யில் ஒருங்​கிணைந்த நீதி​மன்ற வளாகம் கட்ட வேண்​டும், புதைசாக்​கடை திட்​டத்தை தர​மாக, விரைந்து முடிக்க வேண்​டும், டெல்​டாவில் விவசாயப் பணிகள் பாதிக்​கப்​பட்​டுள்​ள​தால் விவசாயிகள், விவசாயத் தொழிலா​ளர்​களுக்கு உதவ வேண்​டும் என்​பன உள்​ளிட்ட பல்​வேறு கோரிக்​கைகள் குறித்து தமிழக முதல்​வரை சந்​தித்​த​போது வலியுறுத்தினேன்.

அவற்றை கவனமாக கேட்​டுக்​கொண்ட முதல்​வர் விஜய், டெல்டா மாவட்​டங்​களில் ஆய்வு செய்ய குழுவை அனுப்பி வைக்க உள்​ள​தாக தெரி​வித்​தார்.

நான் ஆளுங்​கட்​சிக்கு ஆதர​வாக செயல்​பட்​டதன் காரண​மாகவே மன்​னார்​குடி தொகுதிக்கு பல்​வேறு திட்​டங்​களைக் கொண்டு வர முடிந்​தது.

தவெக​வில் இணைய இப்​போது எனக்கு எந்த நெருக்​கடியும் இல்லை. எந்த நெருக்​கடியும் என்​னைக் கட்​டுப்​படுத்​தாது. அதற்​கான சூழ்​நிலை வரும்​போது தெரி​விப்​பேன்.

கள்​ளக்​குறிச்சி விவகாரத்​தில் தவறு செய்​தவர்​கள் யாராக இருந்​தா​லும் தண்​டிக்​கப்​பட வேண்​டும். சட்​டத்​தின் முன் யாரும் தப்​பிக்​கக் கூடாது. இவ்​வாறு அவர் கூறினார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT