சென்னை: தீபாவளி பண்டிகையொட்டி, ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, எண்ணெய் உட்பட 21 பொருட்கள் அடங்கிய இலவச மளிகை தொகுப்பு வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் அரிசி, பருப்பு, வெங்காயம், எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. . இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில், ரேஷன் கடைகள் மூலமாக அரிசி, பருப்பு உட்பட 21 பொருட்கள் அடங்கிய இலவச மளிகை தொகுப்பு வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கூட்டுறவுத் துறை அமைச்சர் வ.காந்திராஜ் தலைமையில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
அதில், தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 2.25 கோடி ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய இலவச மளிகைத் தொகுப்பு வழங்கவும், அதில் என்னென்ன பொருட்கள் இடம்பெற வேண்டும் என்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.
அனைத்தையும் இறுதி செய்து முதல்வரின் ஒப்புதல் பெற்று தீபாவளிக்கு இந்ததொகுப்பை வழங்க பரிசீலனை செய்துவருவதாக கூட்டுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கு முன்னர் திமுக ஆட்சியில் 2022-ம் ஆண்டு பொங்கல் தொகுப்பில் 21 பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.