கஸ்தூரி | கோப்புப் படம்

 
தமிழகம்

“அமைச்சரிடம் பேசியதை தவறாக சித்தரிப்பதா?” - நடிகை கஸ்தூரி ஆதங்கம்

வெற்றி மயிலோன்

சென்னை: “ஆயிரக்கணக்கான மக்கள், கேமராக்கள், பிரஸ் நிறைந்த அரங்கத்தில், ஒலிபெருக்கி சப்தத்தில், பரஸ்பர மரியாதையுடன் பரிச்சயமாக அமைச்சர் சகோதரர் வெங்கட்ரமணனிடம் பேசியதைக்கூட வக்கிரமாகச் சித்தரிப்பதா?” என பாஜக நிர்வாகியும், நடிகையுமான கஸ்தூரி ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “காமாலைக் கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள். கஸ்தூரி தவெகவில் இணைகிறார். அது பாஜகவின் பி-டீம் என்றெல்லாம் கதறுபவர்களை தமிழக மக்கள் ஒருபோதும் நம்பப்போவதில்லை. இதன் பின்னணியில் இருக்கும் அரசியல் வயிற்றெரிச்சலை மக்கள் தெளிவாகவே உணர்ந்துள்ளார்கள்.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் மக்கள் பணியால் ஈர்க்கப்பட்டு பொதுவாழ்வில் அடியெடுத்து வைத்தவள் நான். எக்காலத்திலும் எனக்கு வழிகாட்டி தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமை மட்டுமே. என் மீது முழு நம்பிக்கை வைத்துத் துணை நிற்கும் தலைமைக்கும், தோள் கொடுக்கும் கட்சிச் சொந்தங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

ஆயிரக்கணக்கான மக்கள், கேமராக்கள், பிரஸ் நிறைந்த அரங்கத்தில், ஒலிபெருக்கி சப்தத்தில், பரஸ்பர மரியாதையுடன் பரிச்சயமாக அமைச்சர் சகோதரர் வெங்கட்ரமணனிடம் பேசியதைக்கூட வக்கிரமாகச் சித்தரிப்பதா? அரசியலில் கொள்கை முரண்கள் இருக்கலாம். ஆனால் தனிமனித விரோதத்தை நான் ஒருபோதும் பாராட்டியதில்லை.

நாகரிகமான ஓர் உரையாடலைக்கூட தவறாக சித்தரித்து சாதி, தொழில், பெண்மை, அனைத்தையும் இழிவுப்படுத்தும் கயவர்களின் முயற்சி கீழ்த்தர அவதூறுகளுக்கு அஞ்சமாட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT