தமிழகம்

காவல்துறை அதிகாரிகள் சந்தீப் மித்தல், ஆர்.தினகரனுக்கு புதிய பதவி

தீயணைப்புத்துறை டிஜிபி சீமா அகர்வாலுக்கு கூடுதல் பொறுப்பு

செய்திப்பிரிவு

சென்னை: ​காவல்துறை அதி​காரி​களான சந்​தீப் மித்​தல், ஆர்​.​தினகரனுக்கு புதிய பதவி வழங்​கப்​பட்​டு உள்ளது.

இதுதொடர்​பாக உள்​துறை செயலர் கே.மணி​வாசன் பிறப்​பித்த உத்​தரவு: தமிழக காவல்​துறை ஆயுதப்​படைப் பிரிவு டிஜிபி-​யாக இருந்த சந்​தீப் மித்​தல், தமிழ்​நாடு சீருடை பணி​யாளர் தேர்வு வாரி​யத் தலை​வ​ராக நியமிக்​கப்​பட்​டுள்​ளார். ஆயுதப்​படை பிரிவுக்கு தற்​போது, வண்​டலூரை அடுத்த ஊனமாஞ்​சேரி​யில் உள்ள போலீஸ் அகாடமி இயக்​குந​ராக உள்ள கூடு​தல் டிஜிபி ஆர்​.​தினகரன் நியமிக்​கப்​பட்​டுள்​ளார். இதே​போல், தீயணைப்பு மற்​றும் மீட்பு பணி​கள் துறை இயக்​குந​ரான டிஜிபி சீமா அகர்​வாலுக்கு ‘தீயணைப்பு ஆணை​யத் தலை​வர்’ பதவி கூடு​தலாக வழங்​கப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

கடந்த திமுக ஆட்​சி​யில், ‘தீயணைப்பு ஆணை​யம்’ புதி​தாக உரு​வாக்​கப்​பட்​டது. இதன் தலை​வ​ராக ஓய்​வு​பெற்ற டிஜிபி சங்​கர் ஜிவால் நியமிக்​கப்​பட்​டிருந்​தார். இதே​போல், தமிழ்​நாடு சீருடை பணி​யாளர் தேர்வு வாரிய​மும் புதி​தாக ஏற்​படுத்​தப்​பட்டு ஓய்​வு​பெற்ற டிஜிபி சுனில் குமார் தலை​வ​ராக நியமிக்​கப்​பட்​டிருந்​தார்.

இரு​தினங்​களுக்கு முன்​னர் இரு​வரும் தங்​களது பதவி​களை ராஜி​னாமா செய்​திருந்​தனர். இந்​நிலை​யில், அந்த இடங்​களுக்கு தற்​போது பணி​யில் உள்ள அதி​காரி​கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்.

SCROLL FOR NEXT