தமிழகம்

பி.கே.செந்தில்குமாரி உட்பட 6 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

மோகன் கணபதி

சென்னை: பி.கே.செந்தில்குமாரி, ஷியமளா தேவி, லலித் குமார் உட்பட 6 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு: கட்டாய காத்திருப்பில் உள்ள பி.கே.செந்தில் குமாரி ஐபிஎஸ் இப்போது சென்னை மாநகர போக்குவரத்து மற்றம் சாலை பாதுகாப்பு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை மேற்கு மண்டல ஊழல் ஒழிப்பு காவல் கண்காணிப்பாளர் பொறுப்பில் உள்ள டோங்கரே பிரவீண் உமேஷ் ஐபிஎஸ் இப்போது திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக உள்ள ஷியமளா தேவி இப்போது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவின் காவல் கண்காணிப்பாளராக சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாநகர போக்குவரத்து காவல் துணை கண்காணிப்பாளரான அஷோக் குமார் இப்போது தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் துணை கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளராக உள்ள அக்‌ஷய் அணில் வாக்கரே ஐபிஎஸ் இப்போது திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வுடன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் துணை கோட்டத்தின் உதவி காவல் கண்காணிப்பாளராக உள்ள லலித் குமார் ஐபிஎஸ் இப்போது பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வுடன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணியிட மாற்றம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT