கோப்புப் படம்

 
தமிழகம்

தொழில் துறையில் 5 ஆண்டுகளில் ரூ.12.16 லட்சம் கோடிக்கு முதலீடுகள் ஈர்ப்பு

செய்திப்பிரிவு

தொழில் துறை​யில் கடந்த 5 ஆண்​டு​களில் ரூ.12.16 லட்​சம் கோடிக்​கும் மேலான முதலீடு​கள் ஈர்க்​கப்​பட்​டுள்​ள​தாக ஆளுநர் உரை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

ஆளுநர் உரை​யில் கூறி​யிருப்​ப​தாவது: பொதுப் போக்​கு​வரத்தை மேம்​படுத்​தும் வகை​யில் கடந்த 5 ஆண்​டு​களில் 6,871 புதிய பேருந்​துகள் செயல்​பாட்​டுக்கு கொண்டு வரப்​பட்​டுள்​ளன. மேலும், 5,216 புதிய பேருந்​துகள் கொள்​முதல் செய்​யப்​படு​கின்​றன. காற்று மாசுபடு​வதை​யும், கார்​பன் தடங்​களை​யும் குறைக்​கும் முயற்​சி​யாக தமிழக வரலாற்​றில் முதன்​முறை​யாக 380 மின் பேருந்​துகள் ரூ.288 கோடி​யில் தொடங்​கப்​பட்​டுள்​ளன.

சென்னை கிண்​டி​யில் தொடங்​கப்​பட்​டுள்ள கலைஞர் நூற்​றாண்டு உயர் சிறப்பு மருத்​து​வ​மனை 1,000 படுக்​கை​கள், 15 அறுவை சிகிச்சை அரங்​கு​களு​டன் சென்​னை​யில் அடை​யாளங்​களில் ஒன்​றாக மாறி​யுள்​ளது. முதல்​வரின் விரி​வான மருத்​து​வக் காப்​பீடுத் திட்​டத்​தில் பயனாளி​களுக்​கான ஆண்டு வரு​மானம் உயர்த்​தப்​பட்​டு, ரூ.5 லட்​சம் வரை​யில் மருத்​து​வக் காப்​பீடு ஆண்​டு​தோறும் வழங்​கப்​படு​கிறது. இந்த திட்​டத்​தின் கீழ், 2,053 சிகிச்சை முறை​கள் அங்​கீகரிக்​கப்​பட்​டு, கடந்த 5 ஆண்​டு​களில் ரூ.6,769 கோடி மதிப்​பிலான காப்​பீட்​டுத் தொகை அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளது.

          

தமிழக உள்​ளாட்சி அமைப்​பு​களில் மாற்​றுத் திற​னாளி​களை நியமன முறை​யில் உறுப்​பின​ராக்​கும் வகை​யில் சட்​டத் திருத்​தம் மேற்​கொண்​டுள்​ளது. இதன்​மூலம் 3,631 மாற்​றுத் திற​னாளி​கள், ஊரக மற்​றும் நகர்ப்​புற உள்​ளாட்சி அமைப்​பு​களில் உறுப்​பினர்​களாகி, தமி​ழ​கத்​தின் வளர்ச்​சியை வடிவ​மைக்​கும் வாய்ப்​பைப் பெற்​றுள்​ளனர்.

தொழில் துறை​யில் கடந்த 5 ஆண்​டு​களில் ரூ.12.16 லட்​சம் கோடிக்​கும் மேலான முதலீடு​கள் ஈர்க்​கப்​பட்​டு, மாநிலமெங்​கும் தொழில் திட்​டங்​கள் செயல்​படுத்​தப்​படு​கின்​றன. பல்​வேறு முன்​னணி தொழில் நிறு​வனங்​களு​டன் 1,176 புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​கள் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளன. இதனால் 36 லட்​சம் வேலை​வாய்ப்​பு​கள் உரு​வாக்​கப்​படும். 2025-ம் ஆண்​டில் மட்​டும் 14.65 பில்​லியன் அமெரிக்க டாலர் மதிப்​பிலான மின்​னணு​வியல் பொருட்​கள் தமி​ழ​கத்​தில் இருந்து ஏற்​றுமதி செய்​யப்​பட்​டுள்​ளன.

மதுரை, திருச்​சி, ஓசூர், காரைக்​குடி, விருதுநகர், திருநெல்​வேலி, கன்​னி​யாகுமரி, ஈரோடு, நாமக்​கல் திரு​வண்​ணா​மலை, கரூர், ஊட்​டி, நாகப்​பட்​டினம் மற்​றும் புதுக்​கோட்டை ஆகிய இடங்​களில் புதிய டைடல் மற்​றும் மினி டைடல் பூங்​காக்​கள் நிறு​வப்பட உள்​ளன.

தமி​ழ​கத்​தின் மின் தேவையைப் பூர்த்தி செய்​யும் வகை​யில் உடன்​குடி, எண்​ணூர் அனல்​மின் நிலை​யங்​களில் 2,640 மெகா​வாட் மின் உற்​பத்​தித் திறன் கொண்ட புதிய அலகு​கள் அமைக்​கும் பணி​கள் முடி​யும் தரு​வா​யில் உள்​ளன. மேலும், 520 மெகா​வாட் மின் உற்​பத்​தித் திறன் கொண்ட புனல் மின் நிலை​யங்​கள், மின்​கலன் சேமிப்பு அமைப்​பு​கள் மற்​றும் நீரேற்று மின் திட்​டங்​கள் பல்​வேறு இடங்​களில் அமைக்​கப்​படு​கின்​றன.

எண்​ணூர் அனல் மின் நிலைய 2, 3 மற்​றும் தூத்​துக்​குடி அனல் மின் திட்​டம் விரி​வாக்​கம் ஆகிய​வை​யும் செயல்​படுத்​தப்பட உள்​ளன. இவற்​றின் மூலம் வரும் ஆண்​டு​களில் தமி​ழ​கத்​தின் மின் உற்​பத்தி திறன் 7,000 மெகா​வாட்​டுக்​கும் அதி​க​மாக உயரும்.

மாநிலங்​களுக்கு இடையே பாயும் நதி​களின் நீரில் தனது நியாய​மான பங்​கைப் பெறு​வதற்​குத் தேவை​யான அனைத்து நடவடிக்​கை​களை​யும் மாநில அரசு எடுத்து வரு​கிறது. நமக்​குரிய நியாய​மான நீர்ப்​பங்​கீட்​டில் நாம் ஒரு​போதும் சமரசம் செய்​ய​மாட்​டோம்.

சென்னை கிண்​டி​யில் 118 ஏக்​கர் பரப்​பள​வில் பல்​வேறு இயற்கை சார்ந்த அனுபவங்​களை அளிக்​கும் வகை​யில் உலகத்​தரம் வாய்ந்த சுற்​றுச்​சூழல் பூங்கா அமைக்​கப்​படஉள்​ளது. இதுத​விர, மாமல்​லபுரத்​தில் நந்​தவனம் மரபு​சார் பூங்கா​வும், ஊட்டி ரேஸ்​கோர்​ஸ் மைதானத்​தில் ஒரு புதிய பூங்கா​வும்​ அமைக்​கப்​பட உள்​ளன. இவ்​வாறு அதில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT