சண்முகசுந்தரம்

 
தமிழகம்

கோயில் காவலாளி அஜித்குமார் வழக்கில் டிஎஸ்பி தலைமறைவு: விசாரணை தள்ளிவைப்பு

செய்திப்பிரிவு

மதுரை: சிவகங்கை மாவட்​டம் மடப்​புரம் பத்​ர​காளி​யம்​மன் கோயில் காவலாளி அஜித்​கு​மார், கடந்த ஆண்டு ஜூன் 27-ல் நகை திருட்டு வழக்கு விசா​ரணைக்​காக அழைத்​துச் செல்​லப்​பட்​டு, தனிப்​படைக் காவலர்​களால் தாக்​கப்​பட்​ட​தில் உயி​ரிழந்​தார்.

இந்த வழக்​கில் தனிப்​படைக் காவலர்​கள் 7 பேரை சிபிஐ அதி​காரி​கள் கைது செய்​தனர். காவல் மரணம் நிகழ்ந்​த​போது மானாமதுரை டிஎஸ்​பி​யாக இருந்த சண்​முகசுந்​தரம், திருப்​புவனம் காவல் நிலைய ஆய்​வாளர் ரமேஷ்கு​மார், உதவி ஆய்​வாளர் சிவக்​கு​மார், தலை​மைக் காவலர் இளை​ய​ராஜா ஆகியோர் எதிரி​களாகச் சேர்க்​கப்​பட்​டனர்.

          

சண்​முகசுந்​தரம் உட்பட 4 பேரும் ஆஜராகு​மாறு மதுரை மாவட்ட நீதி​மன்​றம் உத்​தர​விட்​டிருந்​தது. இந்த வழக்கு நேற்று முன்​தினம் விசாரணைக்கு வந்​த​போது, டிஎஸ்பி சண்​முக சுந்தரம் ஆஜராக​வில்​லை.

இதையடுத்து, சண்முகசுந்தரத்​துக்கு எதி​ராக ஜாமீனில் வெளிவர முடி​யாத பிடி​வாரன்ட் பிறப்​பித்​தும், அவரைக் கைது செய்து நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்த சிபிஐக்கு உத்​தர​விட்​டும், விசா​ரணையை பிப். 26-க்கு நீதிபதி தள்​ளி​வைத்​தார்.

இவ்​வழக்கு தலை​மைக் குற்​ற​வியல் நீதித்​துறை நடு​வர் செல்​வ​பாண்டி முன்​னிலை​யில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது. ரமேஷ்கு​மார், சிவக்​கு​மார், இளை​ய​ராஜா ஆகியோர் ஆஜராகினர். ஆனால், டிஎஸ்பி சண்​முகசுந்​தரம் ஆஜராக​வில்​லை.

பின்​னர் விசா​ரணை மார்ச் 5-ம் தேதிக்கு தள்​ளிவைக்​கப்​பட்​டது. தலைமறை​வான சண்​முகசுந்​தரம் உச்ச நீதி​மன்​றத்​தில் முன்​ஜாமீன் பெறும் முயற்​சி​யில் ஈடு​பட்​டுள்​ள​தாக காவல் துறை வட்​டாரம் தெரி​வித்​துள்​ளது.

SCROLL FOR NEXT