தமிழகம்

இந்தியாவில் செல்வாக்கு மிக்கவர்கள் மீதான ஊழல் வழக்கை விசாரிப்பது சிரமமான காரியம்: நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் அதிருப்தி

செய்திப்பிரிவு

சென்னை: இந்​தி​யா​வில் செல்​வாக்கு மிக்க நபர்​கள் மீதான ஊழல் வழக்கை விசா​ரிப்​பது மிக​வும் சிரம​மான காரி​யம் என்று சென்னை உயர் நீதி​மன்ற நீதிபதி என்​.ஆனந்த் வெங்​கடேஷ் அதிருப்தி தெரி​வித்​துள்​ளார்.

அதி​முக முன்​னாள் அமைச்​சர் எஸ்​.பி.வேலுமணிக்கு எதி​ரான டெண்​டர் முறை​கேடு வழக்​கில் குற்​றம்​சாட்​டப்​பட்ட மாநக​ராட்சி முன்​னாள் ஆணை​யர்​கள் கந்​த​சாமி (சென்​னை), விஜய கார்த்​தி​கேயன் (கோவை) ஆகிய 2 ஐஏஎஸ் அதி​காரி​களுக்கு எதி​ராக வழக்கு தொடரு​வதற்கு அனு​மதி வழங்க தாமதம் செய்​வது ஏன் என்​பது குறித்து விளக்​கம் அளிக்க மத்​திய அரசுக்கு சென்னை உயர் நீதி​மன்​றம் ஏற்​கெனவே உத்​தர​விட்​டிருந்​தது.

இந்​நிலை​யில், நீதிபதி என்​.ஆனந்த் வெங்​கடேஷ் முன்பு இந்த வழக்கு நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது மத்​திய அரசுத் தரப்​பில், ‘சம்​பந்​தப்​பட்ட 2 ஐஏஎஸ் அதி​காரி​கள் மீது வழக்கு தொடர அனு​மதி கோரி தமிழக அரசு அனுப்​பிய கடிதம் கடந்த ஜூலை 28-ம் தேதி​தான் கிடைத்​தது. அது பரிசீலிக்​கப்​பட்டு வரு​கிறது’ என்று தெரிவிக்​கப்​பட்டது.

இதுதொடர்​பாக மத்​தியஅரசுக்கு கடந்த ஆக.27-ம் தேதி நினை​வூட்​டல் கடிதம்அனுப்பப்​பட்​டதாக தமிழக அரசுத் தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது.

இதையடுத்து நீதிபதி கூறிய​தாவது: ஊழல் வழக்​கில் தொடர்​புடைய 2 ஐஏஎஸ் அதி​காரி​களுக்கு எதி​ராக வழக்கு தொடரு​வதற்கு அனு​மதி வழங்க இவ்​வளவு தாமதம் ஏற்​படுத்​து​வது ஏன் என்​பது புரி​யாத புதி​ராக உள்​ளது.

இந்​தி​யா​வில் செல்​வாக்கு மிக்க நபர்​கள் மீதான ஊழல் வழக்கை விசா​ரிப்​பது அவ்​வளவு எளி​தானது அல்ல. அது மிக​வும் சிரம​மான காரி​யம்.

வழக்கு தொடர அனு​மதி பெறு​வதற்கே இவ்​வளவு சிரமங்​களை சந்​திக்க வேண்டி இருந்​தால், இதற்​குப் பிறகு அந்த வழக்​கில் என்ன நடக்​கும் என்​பது அந்த கடவுளுக்​குத்​தான் தெரி​யும்.

தாமதம் ஏற்​படு​வது ஏன் என்​பது குறித்​தும், ஒப்​புதல் கோரிய கடிதத்​தின் தற்​போதைய நிலை குறித்​தும் மத்​திய அரசின் பணி​யாளர் மற்​றும் பயிற்​சித் துறை சார்பு செயலர் அடுத்த விசா​ரணை​யின்​போது காணொலி​யில் ஆஜராகி விளக்​கம் அளிக்க வேண்​டும். இவ்​வாறு உத்​தர​விட்ட நீதிபதி, வி​சா​ரணை​யை செப்.16-க்​கு தள்​ளி​வைத்தார்​.

SCROLL FOR NEXT