கோவை ஆர்.எஸ்.புரம் மாநக ராட்சிப் பள்ளி வளாகத்தில் ரூ.9.67 கோடி மதிப்பில் கட்டப் பட்ட, சர்வதேச தரத்தினால் ஆன ஹாக்கி மைதானத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில், ரூ.9.67 கோடி மதிப்பில் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி இரு பாலர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சர்வதேச தரத் தினால் ஆன ஹாக்கி மைதானம் கட்டப்பட்டுள்ளது.
இந்த மைதானத்தை பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கும் நிகழ்வு, ரூ.31.72 கோடி மதிப்பில் 12 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தல், ரூ.152.95 கோடி மதிப்பில் முடிவுற்ற 106 திட்டப்பணிகளை பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கும் நிகழ்வு, ரூ.136.44 கோடி மதிப்பில் 10,626 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு ஆகியவை ஆர்.எஸ். புரம் பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்வில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, சர்வதேச தரத்தினால் ஆன ஹாக்கி மைதானத்தை பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். தொடர்ந்து புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப்பணிகளை பயன்பாட்டுக்கும் தொடங்கி வைத்தார். பின்னர், பயனாளி களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதைத் தொடர்ந்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: இன்றைக்கு ஒட்டுமொத்த இந்தியாவுமே தமிழ்நாட்டை உற்று நோக்குகின்ற வகையில் நம் முதல்வர். திராவிட மாடல் ஆட்சியை சிறப்பாக வழிநடத்திக் கொண்டிருக்கிறார். மகளிருக்கான விடியல் பயணம் திட்டத்தின் மூலம் இந்த நான்கரை வருடங்களில் சுமார் 900 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டுள்ளனர்.
முதல்வர் காலை உணவு திட்டத்தின் மூலம், இன்றைக்கு ஒவ்வொரு நாளும் சுமார் 20 லட்சம் குழந்தைகள் பயன் பெறுகிறார்கள். புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்களின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 8 லட்சம் மாணவ, மாணவிகள் பயன்பெறுகிறார்கள்.
கூட்டத் தொடரில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். 10 லட்சம் அதிநவீன லேப்டாப்களை மாணவர்களுக்கு வழங்க வுள்ளோம். கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் மூலம். தமிழ்நாடு முழுக்க 1.30 கோடி மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் முதல்வர் வழங்குகிறார். இதுமட்டுமல்லாமல், கோவைக்கு தொடர்ந்து ஏராளமான நலத்திட்டங்களை முதல்வர் அறிவித்து வருகிறார்.
இங்கு திறக்கப்பட்ட ஹாக்கி மைதானம் மூலம் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான ஹாக்கிப் போட்டிகள் கோவையில் அடிக்கடி நடைபெறும். திராவிட மாடல் அரசின் இதுபோன்ற திட்டங்களால் இன்றைக்கு நம்முடைய தமிழ்நாடு 11.19 சதவீதம் வளர்ச்சியோடு, இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக நம்பர் 1-ஆக திகழ்ந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், வனத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன், மக்களவை உறுப்பினர்கள் கணபதி ப.ராஜ்குமார், ஈஸ்வரசாமி, பிரகாஷ், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, தமிழ்நாடு 5 தூய்மை பணியாளர் வாரியத் தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி, மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர்.மேயர் கா.ரங்க நாயகி ராமச்சந்திரன். மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், துணை மேயர் ரா.வெற்றிச் செல்வன் மற்றும் பல்வேறு துறை உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.