தமிழகம்

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் பேரவையில் நாளை தாக்கல்

தேர்தலை முன்னிட்டு முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக அரசின் 2026-27-ம் நிதி ஆண்​டுக்​கான இடைக்​கால பட்​ஜெட் சட்​டப்​பேர​வை​யில் நாளை தாக்​கல் செய்​யப்​படு​கிறது.

தமிழக சட்​டப்​பேர​வை​யின் இந்த ஆண்டு முதல் கூட்​டம் கடந்த ஜன.20-ம் தேதி தொடங்​கியது. ஆளுநர் ஆர்​.என்​.ர​வி, அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் பேர​வையை விட்டு வெளி​யேறி​னார். தொடர்ந்து ஆளுநர் உரை​யின் தமிழாக்​கத்தை பேர​வைத் தலை​வர் மு.அப்​பாவு வாசித்​தார். உரையை ஆளுநர் வாசித்ததாக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

          

பின்​னர், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்​கும் தீர்​மானம் மீதான விவாதம் ஜன.22-ம் தேதி தொடங்​கியது. முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் 24-ம் தேதி பதில் அளித்​தார். இதையடுத்​து, மறு​தேதி குறிப்​பி​டா​மல் பேரவை ஒத்​திவைக்​கப்​பட்​டது. தமிழகத்​தில் சில மாதங்​களில் சட்​டப்​பேரவைத் தேர்​தல் நடை​பெறவுள்​ள​தால், தமிழக பட்​ஜெட் தாக்​கல் குறித்த கேள்வி​கள் எழுந்த நிலை​யில் கடந்த 8-ம் தேதி சட்​டப்​பேரவை தலை​வர் மு.அப்​பாவு கூறும்போது, தமிழக சட்​டப்​பேரவை கூட்​டத்​தொடர் வரும் 17-ம் தேதி காலை 9.30 மணிக்​கு, சென்னை தலை​மைச் செயல​கத்​தில் உள்ள சட்​டப்​பேரவை மண்​டபத்​தில் கூடு​கிறது. அன்று 2026-27-ம் ஆண்​டுக்கான இடைக்​கால பட்​ஜெட்டை நிதி அமைச்​சர் தங்​கம் தென்​னரசு தாக்​கல் செய்​கிறார். 20-ம் தேதி 2026-27-ம் ஆண்​டுக்​கான முன்பண மானிய கோரிக்​கை​யும், 2025-26-ம் ஆண்​டுக்​கான கூடு​தல் செல​வின மானிய கோரிக்​கை​யும் தாக்கல் செய்​யப்​படு​கின்​றன.

சட்​டப்​பேர​வையை எத்​தனை நாட்​கள் நடத்​து​வது என்று 17-ம் தேதி நடை​பெறும் அலு​வல் ஆய்​வுக்​குழு கூட்​டத்​தில் முடிவு செய்​யப்​படும். பேரவை நிகழ்​வு​கள் இணை​யதளத்​தில் பதிவேற்​றம் செய்​யப்​படு​கின்​றன. உலகெங்​கிலும் இருந்து யார் வேண்​டு​மா​னாலும் இணை​யதளம் மூலம் பார்க்க முடி​யும். அமைச்​சரின் பதில் உரைகள், மானியக் கோரிக்​கைகள், சிறப்பு தீர்​மானங்​கள் போன்​றவை நேரலை செய்​யப்​படு​கின்​றன. விவாதங்​களை முழு​மை​யாக நேரலை செய்​வது குறித்து அலு​வல் ஆய்​வுக் குழு முடிவு செய்​யும் என்று தெரி​வித்​தார்.

பிப்​.17-ம் தேதி தொடங்​கும் சட்​டப்​பேரவை கூட்​டம் பிப்​.20-ம் தேதி வரை நடை​பெற வாய்ப்​புள்​ள​தாக கூறப்​படு​கிறது. சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வரவுள்​ள​தால், இந்த இடைக்​கால பட்​ஜெட்​டில் வழக்​க​மான நிதி ஒதுக்​கீடு​கள் மட்​டுமின்​றி, மக்​களைக் கவரும் பல முக்​கிய அறி​விப்​பு​களும் இடம்​பெறு​வதற்கு வாய்ப்​புள்​ளது.

தமிழக அரசின் அடுத்த நிதி ஆண்​டுக்​கான பட்​ஜெட் ஆண்​டு​தோறும் பிப்​ர​வரி மாதம் தாக்​கல் செய்​வது வழக்​க​மாகும். கடந்த 2021-ம் ஆண்டு ஆட்​சிக்கு வந்த திமுக பொது பட்ஜெட், வேளாண் பட்​ஜெட் ஆகியவை அடுத்தடுத்த நாட்​களில் தனித்தனியாக தாக்​கல் செய்து வரு​கிறது. தமிழகத்​தில் சில மாதங்​களில் சட்​டப்​பேரவைத் தேர்​தல் நடை​பெறவுள்​ள​தால், இடைக்​கால பட்​ஜெட்டை மட்​டும் தாக்​கல்செய்ய முடி​யும். பின்​னர்​, ஆட்​சிஅமைக்​கும்​ கட்​சி பட்​ஜெட்​டை​தாக்​கல்​ செய்​யும்​ என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

SCROLL FOR NEXT