தமிழகம்

கொளத்தூர் தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் 2-வது நாளாக ஆய்வு

நம்பகத்தன்மை அதிகரிக்கும் என மாநகராட்சி ஆணையர் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: ​கொளத்​தூர் தொகு​தி​யில் பயன்​படுத்​திய வாக்குப்பதிவு இயந்​திரங்​களில் 2-வது நாளாக நேற்​றும் ஆய்வு செய்​யப்​பட்​டது. இதன் மூலம் வாக்குப்பதிவு இயந்​திரங்​கள் மீது மக்​களுக்கு நம்​பகத்​தன்மை அதி​கரிக்​கும் என மாநக​ராட்சி ஆணை​யர் ஜி.எஸ்​.சமீரன் தெரி​வித்​துள்​ளார்.

சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் கொளத்​தூர் தொகு​தி​யில் தவெக வேட்​பாளர் வி.எஸ்​.​பாபு​விடம், திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லின் 8,795 வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் தோற்​றார்.

இந்​நிலை​யில் இத்​தொகு​தி​யின் 14 வாக்​குச்​சாவடிகளில் பதி​வான மின்​னணு வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​களை மறு ஆய்வு செய்ய வேண்​டுமென திமுக சார்​பில் தேர்​தல் ஆணை​யத்​திடம் கோரிக்கை வைக்​கப்​பட்​டது.

இதன்​படி, சிந்​தா​திரிப்​பேட்​டை​யில் பாது​காப்​பாக வைக்​கப்​பட்​டிருந்த கொளத்​தூர் தொகுதி வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​களில், 2 வாக்​குச்​சாவடிகளில் பயன்​படுத்​திய இயந்​திரங்​கள் மாநக​ராட்சி ஆணை​யர் ஜி.எஸ்​.சமீரன் முன்​னிலை​யில் நேற்று முன்​தினம் ஆய்வு செய்​யப்​பட்​டது.

2-வது நாளாக நேற்​றும் 2 வாக்​குச்​சாவடி இயந்​திரங்​களில் ஆய்வு நடத்​தப்​பட்​டது. இது தொடர்​பாக ஆணை​யர் ஜி.எஸ்​.சமீரன் கூறிய​தாவது: தேர்​தல் ஆணைய உத்​தர​வுப்​படி, கொளத்​தூர் தொகு​தி​யில் 2 வாக்​குச்​சாவடிகளில் வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள், கட்​டுப்​பாட்டு இயந்​திரங்​கள், விவி​பாட் இயந்​திரங்​களில் ஆய்​வுப் பணி நடை​பெற்​றது.

முதலில் அதில் பதி​வான வாக்​கு​கள் சரி​பார்க்​கப்​பட்டு திமுக வேட்​பாளரின் தலைமை முகவருக்கு காண்​பிக்​கப்​பட்​டுள்​ளது. பின்​னர் 500-க்​கும் மேற்​பட்ட வாக்​கு​கள் பதிவு செய்​யப்​படும் மாதிரி வாக்​குப்​ப​திவு நடை​பெற்​றது.

அவற்​றின் எண்​ணிக்​கை​யும், யாருக்கு வாக்​களித்​தோம் என்​ப​தைக் காட்​டும் விவி​பாட் இயந்​திரத்​தில் பதி​வான வாக்​கு​கள் எண்​ணிக்​கை​யும் சரி​பார்க்​கப்​பட்டு 100 சதவீதம் வாக்​குப்​ப​திவு உறுதி செய்​யப்​பட்​டுள்​ளது.

விரிவான வழிகாட்டுதல்

2-ம் நாளான இன்​று(நேற்​று) 17, 28 ஆகிய 2 வாக்​குச்​சாவடி இயந்​திரங்​களை சரி​பார்க்​கும் பணி நடை​பெற்று வரு​கிறது. இதில் பதி​வான வாக்​கு​கள் 100 சதவீதம் சரி​யாக இருக்​கிறது. மாதிரி வாக்​குப் பதிவு நடை​பெற்று வரு​கிறது.

உச்ச நீதி​மன்ற உத்​தர​வின்​படி, தேர்​தல் ஆணை​யம் ஒரு விரி​வான வழி​காட்​டு​தல் கொடுத்​துள்​ளது. அதன்​படி இந்த ஆய்வு நடக்​கிறது.

வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள் மீது சந்​தேகம் இருக்​கக் கூடாது என்​ப​தற்​கும், வெளிப்​படைத்​தன்​மையை காட்​டு​வதற்​கும், நம்​பகத்​தன்​மையை அதி​கரிக்​க​வும் இந்த நடை முறை மேற்​கொள்​ளப்​படு​கிறது.

இன்​னும் 4 நாட்​களில் 10 வாக்​குச்​சாவடிகளில் பயன்​படுத்​திய வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​களில் ஆய்வு நடத்​தப்பட உள்​ளது. பிற கட்​சிகளின் முகவர்​களும் இங்கு உள்​ளனர்.

இங்கு தேர்​தல் நடத்​தும் அதி​காரி சார்​பில் 15 பணி​யாளர்​கள், மாவட்ட தேர்​தல் அதி​காரி சார்​பில் 10 பேர், இயந்​திரங்​களை கொண்​டுவர 20 பேர் பணி​யில் ஈடு​படுத்​தப்​பட்​டுள்​ளனர். போலீஸ்​ பாது​காப்​புடன்​ ஆய்​வு நடத்​தப்​படு​கிறது. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

SCROLL FOR NEXT