பாளையங்கோட்டை: பெருமாள்புரம் தொடக்கப் பள்ளி வளாகத்தில் 12 வாக்குச் சாவடிகள் ஒரே இடத்திலேயே அமைக்கப்பட்டிருந்தன. அவை வெவ்வேறு வண்ணங்களில் அமைக்கப்பட்டிருந்தது கவனம் ஈர்த்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு விறுவிறுவென நடந்து வருகிறது. இந்நிலையில், சுவாரஸ்யமான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
அந்த வகையில், பாளையங்கோட்டை பெருமாள் புரம் தொடக்கப்பள்ளி வளாகத்தில் 12 வாக்குச் சாவடிகள் ஒரே இடத்திலேயே அமைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு வாக்குச் சாவடியும் வெவ்வேறு வண்ணங்களில் அமைக்கப்பட்டிருந்தது. அந்த வண்ணங்கள் பள்ளியின் வாயிலில் கோடுகளாக அமைக்கப்பட்டிருந்தன.
வாக்காளர்கள் வாயிலின் முன்னே உள்ள தகவல் பலகையில் உள்ள வாக்குச்சாவடிகளின் எண்களைப் பார்த்து, அதில் உள்ள வண்ணங்களின் கோடுகளின் வழியே தொடர்ந்து சென்றால் வாக்காளர்களின் வாக்குகள் உள்ள வாக்குச் சாவடிக்கே கொண்டு செல்லும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.
இந்த கலர் கோடுகளை சுவாரஸ்யத்துடன் அனுபவித்து சென்றனர் வாக்காளர்கள்.