தமிழகம்

சபரிமலை ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக தகவல் மையங்கள்: இந்துசமய அறநிலையத் துறை ஏற்பாடு

செய்திப்பிரிவு

சென்னை: சபரிமலை யாத்திரை மேற்​கொள்​ளும் தமிழக ஐயப்ப பக்​தர்​களுக்கு உதவுவதற்​காக இந்து சமய அறநிலை​யத் துறை ஆணை​யர் அலு​வல​கத்​தி​லும், மாநில எல்​லை​யான களியக்​கா​ விளை​யிலும், கேரள மாநிலம் சபரிமலை​யிலும் 24 மணி நேர​மும் செயல்​படும் தகவல் மையங்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

இந்த மையங்​கள் 2027 ஜன.20-ம் தேதி வரை செயல்​படும். சென்​னை​யில் இந்து சமய அறநிலை​யத் துறை ஆணை​யர் அலு​வல​கத்​தில் அமைக்​கப்​பட்​டுள்ள தகவல் மையத்தை 1800 425 1757 என்ற கட்​ட​ணமில்லா தொலைபேசி எண்​ணிலும், களியக்​கா​விளை தகவல் மையத்தை 9894433179, 8760668834, 9486270443 ஆகிய எண்​களி​லும் தொடர்பு கொண்டு தேவை​யான தகவல்​களை அறிய​லாம்.

தமிழக பக்​தர்​கள் இந்த சேவையை பயன்​படுத்​திக் கொள்​ளலாம் என இந்து சமய அறநிலை​யத் துறை அமைச்​சர் ரமேஷ் தெரி​வித்​துள்​ளார்​.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT