தமிழகம்

ஈரப்பத வெப்ப அலையால் பாதிக்கப்படும் இந்தியர்கள்: இங்கிலாந்து பல்கலை. ஆய்வு கூறுகிறது

செய்திப்பிரிவு

சென்னை: ஈரப்பத வெப்ப அலை​யால் இந்​தி​யர்​கள் பாதிக்​கப்​படு​வ​தாக இங்​கிலாந்து பல்​கலைக்​கழக ஆய்​வில் தெரிய​வந்​துள்​ளது.

இங்​கிலாந்​தில் உள்ள ரெடிங் பல்​கலைக்​கழகத்​தில் (University of Reading) உள்ள அறி​விய​லா​ளர்​கள், இந்​தியா மற்​றும் ஐக்​கிய ராஜ்ஜி​யத்​தின் (UK) ஆராய்ச்​சி​யாளர்​களு​டன் இணைந்​து, இந்​தி​யா​வின் பரு​வ​மழை காலத்​தில் வரும் “ஈரப்​ப​தத்​துடன் கூடிய வெப்ப அலைகள்” எவ்​வாறு இயங்​கு​கின்றன என்​பது குறித்து ஆய்வு மேற்​கொண்​டனர்.

அந்த ஆய்​வின் முடிவு​கள் தொடர்​பாக, கிளைமேட் டைனமிக்ஸ் (Climate Dynamics) என்ற ஆய்​விதழில், கோடை, பரு​வ​மழை காலத்​தில் இந்​தி​யா​வில் ஏற்​படும் ஈரப்​ப​த​மான வெப்​பஅலைகளின் அமைப்பு (Anatomy of moist heatwaves in India during the summer monsoon season) என்ற தலைப்​பில் ஆய்​வுக்​கட்​டுரை ஒன்று அண்​மை​யில் வெளி​யானது.

அதில் கூறி​யிருப்​ப​தாவது: மனித உடல் வியர்​வையை வெளி​யேற்றி ஆவி​யாதல் மூலம் தன்​னைக் குளிர்விக்​கிறது. இது வறண்ட வெப்ப காலத்​தில் இயல்​பாக நடை​பெறுகிறது. ஆனால் பரு​வ​மழை காலத்​தில் இந்​தி​யா​வின் பெரும்​பகு​தி​யில் உள்​ளது​போல், காற்று ஏற்​கெனவே ஈரப்​ப​தத்​தால் நிறைந்​திருக்​கும்​போது, அந்த ஆவி​யாதல் மெது​வாக நடக்​கிறது அல்​லது முழு​வது​மாக நடை​பெறாது.

இதன் காரண​மாக உடல் குளிர்​வித்​தல் நடை​பெறாமல் உடல் வெப்​பநிலை உயர்​கிறது. வெப்​பச் சோர்​வும், வாத​மும் விரை​வாக ஏற்​படு​கிறது; இது நீடிக்​கும் பட்​சத்​தில் சில மணி நேரங்​களில் மரணம் ஏற்​படு​கிறது. அன்​றைய நாளில் பதி​வான வெப்​பநிலை இயல்​பான​தாகத் தெரிய​லாம். ஆனால் காற்​றில் அதிக ஈரப்​ப​தம் நில​வு​கை​யில் நாம் உணரக்​கூடிய வெப்​ப நிலை அதி​க​மாகிறது.

சென்​னை​யில் கடந்த 2024-ம் ஆண்டு அக்​டோபர் மாதம் நடை​பெற்ற விமான சாகச கண்​காட்​சி​யின்​போது ஏற்​பட்ட 5 பேர் மரணம் மற்​றும் பலர் மயக்​கமடைந்​ததற்கு காற்​றில் இருந்த அதிக ஈரப்​ப​தம் தான் காரணம். அன்​று, 32 டிகிரி செல்​சி​யல் வெப்​பநிலை நில​வியது.

காற்​றில் இருந்த ஈரப்​ப​தம் காரண​மாக அது 42 டிகிரி செல்​சி​யஸ் போன்ற பாதிப்பை ஏற்​படுத்​தி​யது. ஈரப்பத வெப்ப அலை​யால் இந்​தி​யா​வில், விவ​சாய தொழிலா​ளர்​கள், நகர்ப்​புறங்​களில் கட்​டு​மான தொழிலா​ளர்​கள், கான்​கிரீட் வீடு​களில் வசிக்​கும் முதி​யோர் பாதிக்​கப்​படு​கின்​றனர்.

இந்த ஆய்​வானது, வெப்​பம் மற்​றும் ஈரப்​ப​தம் அடிப்​படையி​லான வெப்ப அளவீட்டை (wet-bulb temperature) பயன்​படுத்தி மேற்​கொள்​ளப்​பட்​டது. இந்த ஆய்​வின் மிக​வும் குறிப்​பிடத்​தக்க கண்​டு​பிடிப்பு என்​னவெனில், ஈரப்​ப​தத்​துடன் கூடிய வெப்​பத்தை ஏற்​படுத்​து​வ​தில் மட்​டுமின்​றி, இந்​தி​யா​வில் அது எங்கே மிக​வும் ஆபத்​தாக இருக்​கும் மற்​றும் எப்​போது தாக்​கும் என்​ப​தைத் தீர்​மானிப்​ப​தி​லும் பரு​வ​மழை​யின் பங்கு உள்​ளது என்​பது​தான். இதை 4 வாரங்​களுக்கு முன்பே கண்​டு​பிடித்து உரிய எச்​சரிக்​கையை வழங்க முடி​யும்.இவ்​வாறு ஆய்​வறிக்​கையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT