குன்னூரில் நடந்த விழாவில் உபாசி தேயிலை ஆராய்ச்சி மைய நூற்றாண்டு விழா மலரை குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று வெளியிட்டார். உடன், தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உள்ளிட்டோர். படம்: ஆர்.டி.சிவசங்கர்

 
தமிழகம்

இந்தியத் தேயிலை துறை சர்வதேச பிராண்டாக மாற வேண்டும்: குடியரசு துணைத்தலைவர் அறிவுறுத்தல்

ஆர்.டி.சிவசங்கர்

குன்னூர்: இந்​திய தேயிலைத் துறை சர்​வ​தேச அளவில் அறியப்​படும் வலு​வான வர்த்தக அடை​யாளத்தை (பி​ராண்ட்) உரு​வாக்க வேண்​டும் என குடியரசு துணைத் தலை​வர் சி.பி.​ரா​தாகிருஷ்ணன் வலி​யுறுத்​தி​னார்.

நீல​கிரி மாவட்​டம் குன்​னூரில் உள்ள உபாசி தேயிலை ஆராய்ச்சி மைய நூற்​றாண்டு விழா நேற்று தொடங்​கியது. இதனை சி.பி.​ரா​தாகிருஷ்ணன் தொடங்கி வைத்​தார். உபாசி தலை​வர் அஜய் திப்​பய்யா வரவேற்​றார். தமிழக ஆளுநர் ராஜேந்​திர விஸ்​வ​நாத் அர்​லேகர் முன்​னிலை வகித்​தார்.

விழா மலரை வெளி​யிட்டு சி.பி.​ரா​தாகிருஷ்ணன் பேசி​ய​தாவது: தென்​னிந்​தி​யா​வின் சிறு மற்​றும் பெரிய தோட்ட உரிமை​யாளர்​களுக்கு உபாசி கடந்த 100 ஆண்​டு​களாக சேவை​யாற்றி வரு​கிறது. உற்​பத்தி மட்​டுமன்றி தரமான தயாரிப்​பு, மதிப்​புக் கூட்​டல், சந்​தைப்​படுத்​தலிலும் கவனம் செலுத்த வேண்டும். இலங்கை சிறிய நாடாக இருந்​தா​லும், இந்​திய தேயிலை வர்த்​தகத்​துக்கு கடும் போட்​டி​யாக உள்​ளது.

எனவே, உற்​பத்​திச் செல​வைக் குறைத்​தல், தரத்தை மேம்​படுத்​துதல், பல்​வேறு புதிய தொழில்​நுட்​பங்​களை அறி​முகப்​படுத்​துதல் தொடர்​பாக உபாசி தனது ஆராய்ச்​சிப் பணி​களை விரிவுபடுத்த வேண்​டும். இந்​தியதேயிலைத் துறை மொத்த விற்​பனை வர்த்​தகத்​தில் மட்​டும் கவனம் செலுத்​தாமல், சர்​வ​தேச அளவில் அறியப்​படும் வலு​வான பிராண்​டு​களை உரு​வாக்க முன்வர வேண்​டும்.

பிராண்​டிங் மூலம் அதிக மதிப்​பும், உயர்ந்த விலை​யும், நிலை​யான சந்​தை​யும் கிடைக்​கும். மேலும், தேயிலை தொழிலில் நவீன தொழில்​நுட்ப வசதி​களு​டன் கூடிய புதிய ஆராய்ச்சி மையங்​களை உரு​வாக்க வேண்​டும். இவ்​வாறு பேசி​னார்.

ஆளுநர் அர்​லேகர் பேசும்​போது, “ஒரு காலத்​தில் தேநீர் விற்​பனை​யாள​ராக இருந்​தவர் இன்று உலகத் தலை​வ​ராக (பிரதமர் மோடி) உயர்ந்​திருக்​கிறார். ஆராய்ச்​சி, புது​மை, தொழில்​நுட்ப முன்​னேற்​றம் மற்​றும் தரமான உற்​பத்தி ஆகியவை இந்​திய தேயிலைக்கு உலகள​வில் பெயரும் புகழும் பெற்​றுத் தரு​கின்​றன” என்​றார். விழா​வில், தேயிலை வாரிய துணைத் தலை​வர் சி.​முரு​கன், ஊட்டி சட்​டப்​பேரவை உறுப்​பினர் மு.​போஜ​ராஜன் உள்பட பலர் பங்​கேற்​றனர்.

SCROLL FOR NEXT