சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு நேற்று முன்தினம் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்ட அறிக்கையில், “மூத்த தலைவர் நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரை யாரும் வந்து பார்க்கக்கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். எனவே கட்சியினர், நண்பர்கள், பொதுமக்கள் யாரும் மருத்துவமனைக்கு வர வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.