தமிழகம்

மண்டபம் அருகே 120 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் - கடலோர காவல்படை நடவடிக்கை

எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: மண்டபம் அருகே வடக்கு பாக். நீரிணை கடற்பகுதியில் தடை செய்யப்பட்ட 120 கிலோ கடல் அட்டைகளை கடலோர காவல்படையினர் பறிமுதல் செய்தனர்.

மண்டபம் நிலைய கடலோரக் காவல்படையினர் ரோந்து பணியின் போது, மண்டபம் அருகே பாக். நீரிணை கடற்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் கரையில் நின்று கொண்டிருந்த பதிவு செய்யப்படாத நாட்டுப் படகிலிருந்து சோதனையிட்டனர். சோதனையில், 6 சாக்குப் பைகளில் சுமார் 1,120 கிலோ கடல் அட்டைகள் இருந்தன.

அவற்றை பறிமுதல் செய்த கடலோர காவல்படையினர், அதனை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும், கடல் அட்டைகளை இலங்கைக்கு கடத்த முயன்ற கடத்தல்காரர்கள் குறித்து வனத்துறையும், மண்டபம் மெரைன் போலீஸாரும் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT