தமிழகம்

இந்திய - இலங்கை மீனவர்கள் பிரச்சினை; தமிழக அதிகாரிகளுடன் ஜன. 2-ல் பேச்சுவார்த்தை - இலங்கை அமைச்சர் தகவல்

செய்திப்பிரிவு

ராமேசுவரம்: இந்​திய - இலங்கை மீனவர்​கள் பிரச்​சினை தொடர்​பாக 2027 ஜனவரி 2-ம் தேதி தமிழக மீன்​வளத்​தறை அதி​காரி​களு​டன் சென்​னை​யில் பேச்சு​வார்த்தை நடத்​தப்​படும் என்று இலங்கை மீன்​வளத்​துறை அமைச்​சர் ராமலிங்​கம் சந்​திரசேகர் தெரி​வித்​துள்​ளார்.

இது தொடர்​பாக யாழ்ப்​பாணத்​தில் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது, இந்​திய - இலங்கை மீனவர்​கள் பிரச்​சினை தொடர்​பாக நிரந்​தர​மான தீர்வை எட்ட வேண்​டும் என்​ப​தில் இலங்கை அரசு உறுதி​யாக உள்​ளது. இதற்​காக பல்​வேறு நிலைகளில் பேச்​சவார்த்​தைக்​கான நட​வடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன.

அதன் ஒரு பகுதி​யாக வரும் 2027 ஜனவரி 2-ம் தேதி இலங்கை மீன்​வளத்​துறை அமைச்​சகத்​தின் செயலர் தலை​மையி​லான அதி​காரி​கள் தமிழ்​நாட்​டுக்​குச் சென்று தமிழக அரசின் மீன்​வளத்​துறை அதி​காரி​களு​டன் பேச்சு​வார்த்​தையை நடத்த உள்​ளனர். தமிழக மீனவர்​கள் இலங்கை கடல் பகுதிக்​குள் நுழைந்து தடை செய்​யப்​பட்ட வலைகளை பயன்​படுத்தி மீன்​பி​டிப்​பது உள்​ளிட்ட பிரச்​சினைகளுக்கு தீர்வு காணும் வகை​யில் பேச்சு​வார்த்தை நடத்​தப்​படும்.

முதல்​வர் விஜய் தலை​மையி​லான ஆட்சி, தமிழகத்​தில் நடை​பெறுகிறது. அவரது தலை​மையில் பல்​வேறு விஷயங்​களில் புதிய அணுகுமுறைகள் பின்​பற்​றப்​படு​கின்​றன. இரு நாட்டு மீனவர்​கள் விவகாரத்​திலும் தீர்வை எட்ட முதல்​வர் விஜய் தலை​மையி​லான அரசு ஒத்​துழைப்பு அளிக்​கும் என்​கிற நம்​பிக்கை உள்​ளது. இவ்​வாறு ராமலிங்​கம் சந்​திரசேகர் கூறினார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT