சவுமியா சுவாமிநாதன்

 
தமிழகம்

“சைபர் மோசடிகளைத் தடுக்க இந்தியாவுக்கு ஏஐ பாதுகாப்பு நிறுவனம் தேவை” - சவுமியா சுவாமிநாதன்

செய்திப்பிரிவு

சென்னை: சைபர் மோசடிகளைத் தடுக்க இந்​தி​யா​வில் ஏஐ பாதுகாப்பு நிறு​வனம் தேவை​யான ஒன்று என எம்​.எஸ்​.சு​வாமி​நாதன் ஆராய்ச்சி நிறுவன தலை​வர் சவுமியா சுவாமி​நாதன் தெரிவித்​துள்​ளார்.

இந்​தி​யா​வில் யுபிஐ டிஜிட்​டல் பரிவர்த்​தனை ஏற்​படுத்​தி​யுள்ள மாற்​றங்​கள் குறித்து விளக்​கும் வகை​யில் சந்​தனு பால் மற்​றும் சம்​பாமூர்த்தி இணைந்து எழு​திய “கேஷ்லெஸ் நேஷன்” என்ற நூல் பெங்​களூரில் நடை​பெற்ற சென்னை ஐஐடி முன்​னாள் மாணவர்கள் சங்​கத்​தின் மாநாட்​டில் மத்​திய நிதி​யமைச்​சர் நிர்மலா சீதா​ராமன் வெளி​யிட்​டிருந்​தார்.

இந்​நூலின் அறி​முக விழா சென்னை ஐஐடி-​யில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்​தினர்​களாக முன்​னாள் ஆர்.பி.ஐ கவர்​னர் ரங்​க​ராஜன், எம்​.எஸ்​.சு​வாமி​நாதன் ஆராய்ச்சி நிறுவன தலை​வர் சவுமியா சுவாமி​நாதன், சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, என்​.சி.பி.ஐ முன்​னாள் தலை​வர் பாலசந்திரன் மற்​றும் மும்பை பங்கு சந்தை மேலாண் இயக்​குனர் சுந்​தர​ராமன் ராமமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்​டனர்.

இந்​நிகழ்ச்​சி​யில் ஐஐடி இயக்​குநர் காமகோடி பேசுகை​யில் “யுபிஐ தொழில்​நுட்​பத்​தின் செயல்​முறை மிக​வும் பயனுள்​ள​தாக​வும், எளிமை​யான​தாக​வும் உள்​ளது. கரோனா காலங்​களில் இந்​தியா தன்​னிடம் இருந்த தடுப்​பூசிகளை பிற நாடு​களுக்கு நன்கொடையாக எப்​படி வழங்​கியதோ, அதே​போன்று தனது யுபிஐ தொழில்​நுட்​பத்தை பல்​வேறு நாடு​களுக்கு பகிர்ந்து வருகிறது” என்​றார்.

தொடர்ந்து முன்​னாள் ஆர்​.பி.ஐ கவர்​னர் ரங்​க​ராஜன் பேசுகையில், “தன்​னிச்​சை​யான ஒருங்​கிணைப்​பும், ஒத்துழைப்பும் இணைந்​ததன் விளை​வாகவே யுபிஐ உரு​வானது. இன்​றைய தினம் உலகமே வியந்து பார்க்​கும் ஒரு தொழில்நுட்பமாக யுபிஐ மாறி​யுள்​ளது.

2025-26-ம் ஆண்​டில் இந்தியா​வின் மொத்த உள்​நாட்டு உற்​பத்தி ரூ.346 லட்​சம் கோடி. அதில் யுபிஐ பரிவர்த்​தனை​களின் மதிப்பு ரூ.314 லட்​சம் கோடி என புள்​ளி​விவரங்​கள் கூறுகின்​றன. ஜிஎஸ்டி கவுன்​சில் கூட்​டம் விரை​வில் நடை​பெறவுள்​ளது. இக்​கூட்​டத்​தில் யுபிஐ பரிவர்த்தனை​களுக்கு ஜிஎஸ்டி விதிக்​கக்​கூ​டாது என வலியுறுத்துகிறேன்” என்​றார்.

முன்​ன​தாக எம்​.எஸ்​.சு​வாமி​நாதன் ஆராய்ச்சி நிறுவன தலை​வர் சவுமியா சுவாமி​நாதன் பேசுகை​யில் “நாட்​டின் நிதிச்​சூழலில் ஆர்.பி.ஐ எவ்​வாறு முக்​கிய பங்​காற்​றியது என்​ப​தை​யும், காலப்போக்​கில் ஏற்​பட்ட மாற்​றங்​களை​யும் இந்த புத்​தகம் சிறப்பாக எடுத்​துரைக்​கிறது. யுபிஐ வரு​வதற்கு முன்பு நிதி உள்ளடக்​கம் மிகப்​பெரிய சவாலாக இருந்​தது. இன்​றைய சூழலில் நாம் எதிர்​கொள்​ளும் சைபர் மோசடிகள் பல்​வேறு அச்சுறுத்தல்களை ஏற்​படுத்​துகிறது. யுபிஐ-களை சிலர் மோசடிகளுக்கு பயன்​படுத்த முயற்​சிக்​கின்​றனர். எனவே, இந்தியா​வுக்கு உண்​மை​யில் ஏஐ பாது​காப்​பு நிறு​வனம்​ (AI Safety Institute) கட்​டாயம்​ தேவை” என்​றார்​.

SCROLL FOR NEXT