சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாஜக ஆட்சியில் நடைபெற்று வரும் தேர்தல் ஜனநாயகப் படுகொலையை கண்டித்தும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி நீக்கத்தை வலியுறுத்தியும், இண்டியா கூட்டணி சார்பில் 'ஜனநாயகம் காப்போம்' என்ற தலைப்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று காலை 10 மணியளவில் சென்னை எழும்பூர், லாங்ஸ் தோட்ட சாலை, ரமடா சர்க்கிள் அருகில் எனது தலைமையில் நடைபெற உள்ளது.
இதில் அமைச்சர் ராஜ்மோகன், விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஐயூஎம்எல் தலைவர் காதர் மொய்தீன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாநில செயலாளர் ஆசைதம்பி ஆகியோர் பங்கேற்கிறார்கள்.