மதுரை தத்தனேரி சுடுகாட்டு காளி கோயிலில் சிறப்பு பூஜை செய்த சுயேச்சை வேட்பாளர் சங்கரபாண்டி.

 
தமிழகம்

வாக்குக்கு பணம் கொடுப்பவருக்கு எதிராக மதுரை காளி கோயிலில் சிறப்பு பூஜை செய்த சுயேச்சை வேட்பாளர்

செய்திப்பிரிவு

மதுரை: ​வாக்​குக்கு பணம் கொடுக்​கும் அரசி​யல்​வா​தி​களுக்கு எதி​ராக காளி கோயி​லில் சுயேச்சை வேட்​பாளர் ஒரு​வர் சிறப்பு பூஜை நடத்​தி​யது பெரும் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது. மதுரை செல்​லூரைச் சேர்ந்​தவர் சமூக ஆர்வலர் சங்​கரபாண்​டி.

டைல்ஸ் ஒட்டும்தொழில் செய்து வரு​கிறார். வரு​மானத்​தில் ஒரு பகு​தியை சமூகப்பணி​களுக்​குச் செல​விடுகிறார். வாக்​குக்கு பணம் கொடுக்​கும் கலாச்​சா​ரத்தை கடுமையாக எதிர்த்​துப் பிரச்​சா​ரம் செய்து வரு​கிறார். தற்​போது மதுரை வடக்கு தொகு​தி​யில் சுயேச்​சை​யாகப் போட்​டி​யிடு​கிறார்.

          

இந்​நிலை​யில், சில நாட்​களுக்கு முன்பு இவர் மதுரை முழு​வதும் ஒட்​டிய சுவரொட்​டி​யால் பரபரப்பு ஏற்​பட்​டது. அதில், தேர்​தலில் வாக்​காளர்​களுக்கு வாக்​களிக்க பணம் முறை​கே​டாக வழங்கி ஜனநாயக படு​கொலை செய்​யும், ஊழல் அரசி​யல்​வா​தி​கள் ரத்த வாந்தி எடுத்து தேர்​தலில் தோல்வி அடைய வேண்​டும்.

மேலும், தமிழகத்​தில் நடை​பெற இருக்​கும் பேர​வைத் தேர்​தல், ஐனநாயக முறைப்​படி நேர்​மை​யாக நடை​பெற வேண்​டும் என்ற வேண்​டு​தலோடு மதுரை தத்​தனேரி சுடு​காட்டு காளி​யிடம் சிறப்பு பூஜை நடை​பெறும் எனக் கூறி​யிருந்​தார்.

அதன்படி சங்​கர​பாண்டி பூஜை பொருட்​களு​டன் கோயிலுக்கு நேற்று வந்​தார். இதற்கு போலீ​ஸார் எதிர்ப்​புத் தெரி​வித்​தனர். பின்​னர் போலீ​ஸார் அனு​ம​தி​யுடன் விளக்கு ஏற்றி பூஜை செய்துவிட்டு திரும்​பி​னார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, வாக்​குக்​குப் பணம் தருவதை ஒழிக்​கவே பூஜை நடத்​தினேன். நான் தேர்​தலில் வெற்றி பெற்​றால் பொது​மக்​களுக்​கு அடிப்​படை பணி​கள் அனைத்​தை​யும் செய்து கொடுப்பேன். லஞ்​சம்வாங்​காமல் பணி செய்​வேன் என்​றார்.

SCROLL FOR NEXT