சென்னை: சென்னையில் உள்ள மத்திய, மாநில அரசு அலுவல்கங்களில் சுதந்திர தின விழா நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
நாடு முழுவதும் 80-வது சுதந்திர தினம் நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. சென்னையில் செயல்பட்டு வரும் மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
சென்னை, பாரத சாரண சாரணியர் இயக்கத் தலைமையகத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செய்து, 37 சிறந்த சாரணர், திரி சாரணர், குருளையர், நீலப் பறவையினருக்கு விருதுகள் வழங்கினார். சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் மேயர் பிரியா தேசிய கொடியை ஏற்றிவைத்து, தேசிய மாணவர் படை, சாரணசாரணியர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் எஸ்.மாலதி ஹெலன் தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். கோயம்பேட் டில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில், தேர்தல் ஆணையர் பா.ஜோதி நிர்மலா சாமி தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
சென்னை பல் கலைக் கழகத்தில் உயர்கல்வித் துறை செயலாளர் தீரஜ் குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமையகத்தில் மின்வாரிய தலைவர் அருண் ராய் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார்.
சென்னை எழிலகத்தில், வருவாய் நிர்வாக ஆணை யர் நா.முருகானந்தம், தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில், நிலச் சீர்திருத்த ஆணையர் ஹர் சஹாய் மீனா, நகர்ப்புற நிலவரி ஆணையர் பா.மகேஸ்வரி, பேரிடர் மேலாண்மை ஆணை யர் அ.சிவஞானம், சமூக பாதுகாப்புத் திட்ட இயக்குநர் ப.காயத்ரி கிருஷ்ணன், நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநர் தா.கிருஸ்துராஜ், மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மாநகர் போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகத்தில், மேலாண் இயக்குநர் த.மோகன் தேசியக் கொடியை ஏற்றிவைத்து, மரியாதை செலுத்தினார். சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில் மேலாண்மை இயக்குநர் த.ஆனந்த், தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.
தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சார்பில் அயனாவரத்தில் உள்ள ஆர்.பி.எஃப் மைதானத்தில் சுதந்திர தின விழா நடைபெற்றது. இதில் கோட்டம் மேலாளர் சைலேந்திர சிங் தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செய்தார். மேலும் ஐசிஎஃப் மைதானத்தில் நடைபெற்ற விழாவில் ஐசிஎஃப் பொது மேலாளர் மணீஷ் அகர்வால் தேசிய கொடியை ஏற்றிவைத்து ரயில்வே பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார். சென்னை சர்வதேச விமான நிலையத்தில் விமான நிலைய இயக்குநர் ராஜா கிஷோர் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செய்தார்.
நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் தமிழகம் மற்றும் புதுவை வருமான வரி தலைமை ஆணையர் சுனில் பாஜ்பாய், ஜிஎஸ்டி பவனில் மத்திய கலால், சுங்கம் மற்றும் ஜிஎஸ்டி தலைமை ஆணையர் எஸ்.கே.விமல நாதன் ஆகியோர் தேசியக் கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினர். சென்னை இந்தியன் ஆயில் பவனில், தெற்கு மண்டல நிர்வாக இயக்குநரும் தமிழக மாநிலத் தலைவருமான வி.சி.அசோகன் தேசியக் கொடியை ஏற்றினார்.