தமிழகம்

சென்னையில் மு.க.அழகிரி மருமகன் வீடு உள்பட 3 இடங்களில் வருமானவரித் துறை சோதனை

முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: ​முன்​னாள் மத்​திய அமைச்​ச​ரான மு.க.அழகிரி மருமகன் வீடு உள்பட சென்​னை​யில் 3 இடங்​களில் வரு​மான வரித்​துறை அதி​காரி​கள் நேற்று திடீர் சோதனை நடத்​தினர்.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வாக்​குப் பதிவு நாளை மறு​நாள் ஒரே கட்​ட​மாக நடை​பெற உள்​ளது. இதற்​கான ஏற்​பாடு​களை தேர்​தல் ஆணை​யம் முழு வீச்​சில் செய்​துள்​ளது.

இதுஒரு​புறம் இருக்க பணம், பரிசு பொருட்​களை கொடுத்து அரசி​யல் கட்​சி​யினர் வாக்​காளர்​களை கவர்ந்​து​விடக் கூடாது என்​ப​தற்​காக தேர்​தல் ஆணை​யம் தொகு​திதோறும் பறக்​கும் படைகளை அமைத்து 24 மணி நேர​மும் சுழற்சி முறை​யில் கண்​காணித்து வரு​கிறது.

இந்​நிலை​யில், வரு​மானவரித் துறை அதி​காரி​கள் சென்​னை​யில் 3 இடங்​களில் நேற்று திடீர் சோதனை​யில் ஈடு​பட்​டனர். முதல்​கட்​ட​மாக சென்னை சாஸ்​திரி நகர் 11-வது குறுக்​குத் தெரு​வில் உள்ள குடி​யிருப்பு ஒன்​றில் சோதனை நடத்​தினர்.

இது முன்​னாள் முதல்​வ​ரான கருணாநி​தி​யின் மகனும், முன்​னாள் மத்​திய அமைச்​சரு​மான மு.க.அழகிரி​யின் மருமகன் வெங்​கடேஷுக்கு சொந்​த​மான வீடு என கூறப்​படு​கிறது.

இதே​போல், அதே பகு​தி​யில் உள்ள தொழில் அதிப​ரான வெங்​க​டாச்​சலம் என்​பவருக்கு சொந்​த​மான வீடு மற்​றும் வேப்​பேரி இ.வி.கே. சம்​பத் சாலை​யில் உள்ள குடி​யிருப்பு ஒன்​றில் வசிக்​கும் பைனான்​சி​ய​ரான பிர​வீன் என்​பவரது வீட்​டிலும் வரு​மான வரித்​துறை​யினர் சோதனை நடத்​தினர்.

அவர்​களு​டன் தேர்​தல் பறக்​கும் படை​யினரும் இணைந்து சோதனை​யில் ஈடு​பட்​டனர். சோதனை​யின் முடி​வில் முக்​கிய ஆவணங்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​ட​தாக கூறப்​படு​கிறது.

தேர்​தல் நெருங்​கும் நேரத்​தில் பணப்​பட்​டு​வாடா தொடர்​பான புகாரின் அடிப்​படை​யில் இந்த சோதனை நடை​பெற்​ற​தாக முதல்​கட்​டத் தகவல் வெளி​யாகி உள்​ளது. ஆனால்,

சோதனை நடை​பெற்​றதற்​கான காரணத்தை வரு​மானவரித் துறை அதி​காரி​கள் அதி​காரப்​பூர்​வ​மாக வெளி​யிட​வில்​லை. முக்​கிய நபர்​களின் வீடு​களில் நடை​பெற்ற இந்த சோதனை அரசி​யல் வட்​டாரத்​தில் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

SCROLL FOR NEXT