பழநி பூங்கா சாலையில் உள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்தில் பக்தர்களின் வசதிக்காக செயல்பட்டு வரும் இலவச வாகன நிறுத்தம்.

 
தமிழகம்

பழநி தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமான ரூ.100 கோடி நிலம் சட்டவிரோதமாக பத்திரப்பதிவு

பக்தர்கள், தேவஸ்தானம் அதிர்ச்சி

செய்திப்பிரிவு

பழநி: உச்ச நீதி​மன்​றம் மற்​றும் உயர் நீதி​மன்ற உத்​தர​வு​களை மீறி, பழநி தண்​ட​பாணி சுவாமிகள் மடத்​துக்கு சொந்​த​மான ரூ.100 கோடி மதிப்​பிலான 1.40 ஏக்​கர் நிலம், தனி​நபர்​களுக்கு அண்​மை​யில் சட்​ட​விரோத​மாக பத்​திரப்​ப​திவு செய்​யப்​பட்​டுள்ள விவ​காரம் பக்​தர்​கள், தேவஸ்​தான அதி​காரி​களை அதிர்ச்சி அடையச் செய்​துள்​ளது.

திண்​டுக்​கல் மாவட்​டம் பழநி அடி​வாரம் பூங்கா சாலை​யில் தண்​ட​பாணி சுவாமிகள் மடத்​துக்கு சொந்​த​மான நிலம் உள்​ளது. பழநி முரு​கன் கோயிலுக்கு வரும் பக்​தர்​கள் இந்த நிலத்​தில் தங்கி இளைப்​பாற​வும், அன்​ன​தானம் வழங்​க​வும் பயன்​படுத்​தப்​பட்டு வந்​தது. இந்த நிலத்​தின் மூலம் கிடைக்கும் வரு​வாய் கோயில் கட்​டளைக்கு பயன்​படுத்​தப்​பட்டு வந்த நிலையில், காலப்​போக்​கில் இந்த நிலத்தை தனி​யார் சிலர் ஆக்​கிரமித்​தனர்.

இதுதொடர்​பாக, பழநி தேவஸ்​தானம் சார்​பில் உயர் நீதி​மன்​றம்,உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது. வழக்கை விசா​ரித்த நீதி​மன்​றங்​கள், தண்​ட​பாணி சுவாமிகள் மடத்​துக்​கு, பழநி தண்​டா​யுத​பாணி சுவாமி கோயில் இணை ஆணை​யரை தக்​காராக நியமித்ததுடன் இந்த நிலத்தை தேவஸ்​தானத்​துடன் இணைத்​தும் உத்​தர​விட்​டன.

இதையடுத்​து, தண்​ட​பாணி சுவாமிகள் மடத்​துக்கு சொந்​த​மான 1.40 ஏக்​கர் நிலம், தக்​கார் மற்​றும் பழநி கோயில் இணை ஆணை​யரு​மான மாரி​முத்து தலை​மை​யில் 60 ஆண்​டுக்கு பிறகு கடந்த 2025 செப்.12-ம் தேதி மீட்​கப்​பட்​டது. இந்த நிலத்​தின் தற்​போதைய மதிப்பு ரூ.100 கோடி ஆகும். தற்​போது அந்த நிலத்​தில் பழநி முரு​கன் கோயிலுக்கு வரும் பக்​தர்​களின் வசதிக்​காக இலவச வாகன நிறுத்​தம் அமைத்து, பயன்​பாட்​டில் உள்​ளது.

இதற்​கிடையே, பழநி இணை சார் பதி​வாளர் கடந்த 2-ம் தேதி பணி மாறு​தலில் சென்ற நிலை​யில், கூடு​தல் பொறுப்​பாக கவனித்து வந்த மற்​றொரு இணை சார் பதி​வாளர் மூலம் 6-ம் தேதி தண்​ட​பாணி சுவாமிகள் மடத்​துக்கு சொந்​த​மான நிலம் சட்​ட​விரோத​மாக தனி​நபர்​களுக்கு பத்​திரப்​ப​திவு செய்​யப்​பட்​டுள்​ளது. இது பக்​தர்கள், தேவஸ்தான அதி​காரி​கள் மத்​தி​யில் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

இந்​நிலை​யில் அந்த பத்​திரப்பதிவு​களை ரத்து செய்​யக் கோரி, பதிவுத்​துறை தலை​வர், துணைத் தலை​வர், மாவட்​டப் பதி​வாளர் ஆகியோ​ருக்கு பழநி கோயில் இணை ஆணை​யர் மாரி​முத்து அறிக்கை அனுப்​பி​யுள்​ளார்.

SCROLL FOR NEXT