சென்னை: இந்திய ஜனநாயக கட்சி (ஐஜேகே) தலைவர் ரவி பச்சமுத்து நேற்று வெளியிட்ட அறிக்கை: காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டுவது தொடர்பாகவும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு குறித்தும் கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி விவாதித்துள்ளனர்.
மேகேதாட்டு அணை திட்டத்தின் விரிவான அறிக்கையை திருத்தி அளிப்போம் என்று கர்நாடக முதல்வர் கூறியுள்ளார். ஆனால், அவர்களின் திட்டங்களை எதிர்க்க, தமிழகத்தில் மட்டும் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தாமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை.
அனைத்து கட்சிகளும் ஒருமித்த கருத்தில்தான் உள்ளனர். மேகேதாட்டு அணை கட்டக் கூடாது என்ற ஒற்றை நோக்கத்திலேயே போராடுகின்றனர்.
எனவே, அனைத்துக் கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்டி, மேகேதாட்டுவில் அணை கட்டக்கூடாது என்று வலுவான அழுத்தத்தை மத்திய அரசுக்கும், கர்நாடக அரசுக்கும் கொடுக்க வேண்டும்.