தமிழகம்

ரயில்களில் மகளிர் பெட்டியில் ஆண்கள் பயணித்தால் ரூ.2,500 அபராதம் - புதிய விதிமுறை அமல்

செய்திப்பிரிவு

சென்னை: ர​யில்​களில் மகளிர் பெட்​டி​யில் ஆண்​கள் பயணித்தால் அபராதம் ரூ.500-ல் இருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்​டுள்​ளது. புதிய விதி​முறை​கள் நேற்று முதல் அமலுக்கு வந்​தன.

ரயில்வே செயல்​பாடு​களை வலிமைப்​படுத்​த​வும், பயணி​களின் ஒழுக்​கத்தை மேம்​படுத்​து​வும் வகை​யில், ரயில்வே சட்​டம் 1989-ன் படி, பல விதி​கள் திருத்​தப்​பட்​டுள்​ளன.

அதன்​படி, ரயில்​களில் மகளிர் பெட்​டிகளில் அனு​ம​தி​யின்றி ஆண்கள் நுழைந்​தாலோ அல்​லதுபயணித்​தாலோ அபராதத் தொகை ரூ.2,500 விதிக்​கப்​பட்​டுள்​ளது. முன்பு இத்​தொகை ரூ.500 ஆக இருந்தது. இது த​விர, ரயில்​களில் உரிய டிக்​கெட் இல்​லாமல் பயணிப்​போர் மீது, முன்பு ரூ.250 அபராதம் விதிக்​கப்​பட்​டது. இத்தொகை, ரூ.500 ஆக உயர்த்​தப்​பட்​டுள்​ளது. இப்​பு​திய விதிமுறை​கள் நேற்று முதல் அமலுக்கு வந்​துள்​ளது.

இது குறித்​து, ரயில்வே அதி​காரி​கள் கூறிய​தாவது: ரயில்வே சட்டம் 1989-ன் படி, விதி​மீறல்​களுக்கு விதிக்​கப்​படும் அபராத தொகை ரூ.500-ல் இருந்து அதி​கபட்​ச​மாக ரூ.5,000 வரை உயர்த்தப்பட்​டுள்​ளன. அதன்​படி, ரயில் நிலை​யங்​களில் அனுமதியின்றி விற்​பனை செய்​தால் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்​கப்​படும். இதை செலுத்த மறுத்​தால், நீதி​மன்​றம் வாயி​லாக ரூ.5 ஆயிரம் வரை அபராதம் செலுத்​தும் வகை​யில் மாற்​றம் செய்யப்​பட்​டுள்​ளன.

பெண்​களுக்​கான பெட்​டி களில் ஆண்​கள் பயணித்​தால் ரூ.2,500-ம் அபராதம் விதிக்​கப்​பட்​டுள்​ளது. ரயி​லில் புகைப் பிடித்​தால் ரூ.2 ஆயிர​மும், மாற்​றுத் திற​னாளி​கள் பெட்​டி​யில் பயணித்​தால், ரூ.2 ஆயிர​மும் அபராதம் விதிக்​கப்​பட்​டுள்​ளது. இது த​விர, ரயில்​களில் அபாயகர​மான பொருட்​களை எடுத்து சென்​றால், ரூ.2 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை வி​திக்​கப்​பட்​ட அபராதம் ரூ.10 ஆயிர​மாக உயர்த்​தப்​பட்​டுள்​ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT