நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

 
தமிழகம்

இலவச திட்டங்களால் உண்மையான வளர்ச்சி சாத்தியமா? - சீமான் கேள்வி

எம்.நாகராஜன்

தாராபுரம்: இலவச திட்டங்​களால் உண்மையான வளர்ச்சி சாத்திய​மாகுமா என, தாராபுரம் இடைத்​தேர்தல் பிரச்​சாரக் கூட்டத்தில் சீமான் கேள்வி எழுப்​பி​னார்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்​திகாவை ஆதரித்து, தாராபுரத்தில் நேற்று நடந்த பிரச்​சாரக் கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் பேசிய​தாவது: தேர்தல் காலத்தில் வழங்கப்​படும் இலவச வாக்குறு​தி​களால் நாட்டின் கடன் சுமை அதிகரிக்​கிறது.

இலவசப் பேருந்து திட்டங்​களைச் செயல்​படுத்​தும்​போது, அதை இயக்கும் ஓட்டுநர்கள், நடத்துநர்​களுக்கான ஊதியம், பேருந்துகளைப் பராமரிக்கும் செலவு மற்றும் புதிய பேருந்​துகள் வாங்கு​வதற்கான நிதி ஆகியவை எங்கிருந்து பெறப்​படு​கின்றன? நாட்டின் ஒட்டுமொத்த கடன் சுமை அதிகரித்​து​வரும் சூழலில், இத்தகைய இலவசத் திட்டங்கள் தற்காலிக​மான​தாகவே இருக்கும். பொருளாதார நெருக்கடி ஏற்படும்போது இத்திட்​டங்கள் நிறுத்​தப்​பட்​டால், அது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்​தும்.

உலக நாடுகளுடன் ஒப்பிடும்​போது, நமது கல்வி மற்றும் மருத்துவக் கட்டமைப்பு மேம்படுத்​தப்பட வேண்டும். அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு மருத்​து​வ​மனை​களின் தரத்தை உயர்த்துவதே உண்மையான வளர்ச்​சிக்கான வழியாகும். இலவச திட்டங்​களால் வளர்ச்சி சாத்தி​ய​மாகுமா? நிலத்தடி நீர் மாசுபாடு மற்றும் பிளாஸ்டிக் கழிவு​களால் ஏற்படும் பாதிப்​புகள் குறித்து தீவிரக் கவனம் செலுத்​தப்பட வேண்டும்.

தொழிற்​சாலைக் கழிவு​களால் நிலத்தடி நீர் நஞ்சாவதும், பிளாஸ்டிக் கழிவு​களின் பெருக்​கமும் எதிர்​காலச் சந்ததி​யினரின் வாழ்வா​தா​ரத்தைப் பெரிதும் பாதிக்​கும். வாக்கு அரசியலுக்காக இலவசங்களை அள்ளித்தருவதை விட்டு​விட்டு, மக்களுக்குத் தரமான கல்வி, வேலைவாய்ப்பு, சிறந்த கட்டமைப்பு வசதிகள் மற்றும் சுகாதாரமான சூழலைத் தருவதே நிலையான தீர்வாக அமையும். எனவே, உண்மையான மாற்றத்தை பெற வாக்கு பதிவின் போது ‘விசிலை விடு விவசாயியை தொடு’. தமிழகத்துக்கான புதிய மாற்றம் தாராபுரத்தில் இருந்து தொடங்கட்​டும். இவ்வாறு அவர் பேசி​னார்.

SCROLL FOR NEXT