இளைஞர் விளையாட்டுத் திருவிழாவுக்கான முன்பதிவை துணை முதல்வர் உதயநிதி நேற்று தொடங்கி வைத்தார். உடன் துறை செயலர் சத்யபிரத சாஹு, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி.

 
தமிழகம்

‘இது நம்ம ஆட்டம் 2026’ விளையாட்டு திருவிழாவில் பங்கேற்க முன்பதிவு: உதயநிதி தொடங்கி வைத்தார்

செய்திப்பிரிவு

சென்னை: ‘இது நம்ம ஆட்​டம் 2026’ என்ற இளைஞர் விளை​யாட்​டுத் திரு​விழாவுக்​கான ஆன்​லைன் முன்​ப​திவை துணை முதல்​வர் உதயநிதி நேற்று தொடங்கி வைத்​தார்.

இளைய தலை​முறை​யினரின் உடல் மற்​றும் மன ஆரோக்​கி​யத்தை மேம்​படுத்​தும் வகை​யில் தமிழ்​நாடு விளை​யாட்டு மேம்​பாட்டு ஆணை​யம் சார்​பில், ‘இது நம்ம ஆட்​டம் 2026’ என்ற பெயரில் முதலமைச்சர் இளைஞர் விளை​யாட்​டுத் திரு​விழா, தமிழகம் முழு​வதும் நடை​பெற உள்​ளது.

அதன்​படி ஊராட்சி ஒன்​றி​யம், மாவட்​டம் மற்​றும் மாநில அளவில் இந்த விளை​யாட்டுத் திரு​விழா ஜன.22 முதல் பிப்​.8-ம் தேதி வரை நடத்​தப்​படு​கிறது. இதற்​கான இணை​யதள முன்​ப​திவை துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் சென்​னை​யில் நேற்று தொடங்கி வைத்​தார். இந்த போட்​டிகளில் 16 முதல் 35 வயதுக்​குட்​பட்ட இளைஞர்​கள் பங்​கேற்​கலாம்.

தடகளம் (100 மீட்​டர், குண்டு எறிதல்), கபாடி, கைப்​பந்​து, கேரம், கயிறு இழுத்​தல் மற்​றும் ஸ்ட்​ரீட் கிரிக்​கெட், ஓவி​யம், கோலப்​போட்​டிகள் மற்​றும் மாற்​றுத் திற​னாளி​களுக்கு 4 பிரிவு​களில் போட்​டிகள் நடத்​தப்​பட​வுள்​ளன. ஊராட்சி ஒன்​றிய அளவில் முதலிடம் பிடிப்​பவர்​களுக்கு ரூ.3,000, மாவட்ட அளவில் ரூ.6,000 பரிசுத்​தொகை​யாக அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. மாநில அளவி​லான போட்​டிகளில் வெற்றி பெறும் அணி​களுக்கு தலா ரூ.75,000 வரை பரிசு வழங்​கப்​படும்.

இதற்​காக தமிழக அரசு மொத்​தம் ரூ.20.48 கோடியை பரிசுத்​தொகை​யாக ஒதுக்​கி​யுள்​ளது. இப்​போட்​டிகளில் கலந்து கொள்ள விரும்​பும் இளைஞர்​கள் www.cmyouthfestival.sdat.in என்ற இணை​யதளத்​தில் ஜன.21-க்​குள் விண்​ணப்​பிக்க வேண்​டும். தனி​நப​ராகவோ அல்​லது கல்வி நிறு​வனங்​கள் மற்​றும் ஊராட்சி அமைப்​பு​கள் மூல​மாகவோ முன்​ப​திவு செய்யலாம். கூடு​தல் விவரங்​களுக்கு 9514000777 என்​ற எண்​ணைதொடர்​பு கொள்​ளலாம்​.

SCROLL FOR NEXT