தமிழகம்

‘ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டேன்...’ - ‘வாட்ஸ் அப்’பில் அனுப்பினால் வருமாம் தங்கக் காசு!

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

இந்த முறை எந்​தக் கட்சி ‘எவ்​வளவு வரைக்​கும்’ கொடுக்​கும் என வாக்​காளப் பெருங்​குடி மக்​கள் இப்​போதே பேச ஆரம்​பித்​து​விட்ட நிலை​யில், ஓட்​டுக்கு சம்​திங் வாங்க மாட்​டேன் என வாட்ஸ் தகவல் அனுப்​பி​னால் குலுக்​கல் முறை​யில் ஒரு​வ​ருக்கு தங்​கக் காசு தரு​வ​தாக பிரகடனம் செய்​திருக்​கி​றார் மதுரைக்​கார சமூக ஆர்​வலர் சங்​கர​பாண்​டியன்.

‘தமிழ்​நாடு சாக்​கடை ஒழிப்​புக் கட்​சி’​யின் தலை​வ​ரான சங்​கர​பாண்​டியன், தனது வார்​டுக்கு உட்​பட்ட மக்​களுக்கு எஸ்​ஐஆர் படிவங்​களை பூர்த்தி செய்​வ​தில் உதவி செய்து வரு​கி​றார். அப்​படி விண்​ணப்​பங்​களை நிரப்​பிக் கொடுக்​கும் சாக்​கில், ‘ஓகே எஸ்​ஐஆர் ஓட்​டுக்​குப் பணம் வாங்க மாட்​டேன்’ என்று டைப் செய்து தனக்கு வாட்ஸ் அப்பில் அனுப்​பி​னால் அவர்​களில் ஒரு​வரை குலுக்​கல் முறை​யில் தேர்வு செய்து ஜனவரி 27-ம் தேதி தேசிய வாக்​காளர் தினத்​தில் அவருக்கு ஒரு கிராம் தங்க காசு வழங்​கு​வ​தாக அறி​வித்​துள்​ளார்.

இந்த அறி​விப்பை போஸ்​ட​ராக அடித்து ஒட்டி இருக்​கும் சங்​கர​பாண்​டியன், “மற்​றவர்​கள் ‘திரு​மங்​கலம் ஃபார்​முலா’ என்று சொல்​லுமளவுக்கு இதே மதுரை மாவட்​டத்​தில் தான் ஓட்​டுக்கு காசு கொடுத்து மோச​மான வரலாற்றை உரு​வாக்​கி​னார்​கள். அதே மதுரை​யில் இருந்து எனது இந்த சிறிய முயற்​சியை செய்​திருக்கிறேன். போஸ்​டரைப் பார்த்​து​விட்டு வாட்ஸ் அப்​பில் மெசேஜ்களை அனுப்​பிக் குவித்து வரு​கி​றார்​கள் மக்​கள். அதில் ஒரு​வ​ருக்கு ஒரு கிராம் தங்​கக் காசை நிச்​ச​யம் வழங்​கு​வேன்’’ என்​றார்.

SCROLL FOR NEXT