புதுச்சேரி திருபுவனை தொகுதியில் திமுக வேட்பாளர் அங்காளனுக்கு எதிராக காங்கிரஸின் போட்டி வேட்பாளர் வேலு காங்கிரஸாருடன் சென்று வாக்கு சேகரித்தார்.

 
தமிழகம்

“ராகுலுக்கு திருமணம் நடந்தால்தான் விலகுவேன்” - காங்கிரஸ் போட்டி வேட்பாளர் கிண்டல்

கட்சித் தலைவர்களின் புகைப்படத்துடன் தீவிர பிரச்சாரம்

செய்திப்பிரிவு

புதுச்சேரி: புது​வை​யில் இண்​டியா கூட்​ட​ணி​யில் திமுக​வுக்கு ஒதுக்​கப்​பட்ட 13 தொகு​தி​களில் காலாப்​பட்​டு, ராஜ்பவன், திரு​புவனை, காரைக்​கால் தெற்​கு, மங்​கலம், விடு​தலை சிறுத்​தைக்கு ஒதுக்​கப்​பட்ட உழவர்​கரை ஆகிய 6 தொகு​தி​களில் போட்டி காங்​கிரஸ் வேட்​பாளர்​கள் களத்​தில் உள்​ளனர்.

இண்​டியா கூட்​ட​ணிக் கட்சி வேட்​பாளர்​களையே எதிர்த்து அவர்கள் வேட்பு மனு தாக்​கல் செய்​தனர். இவ்​வாறு போட்​டி​யிடு​பவர்​கள் காங்​கிரஸ் கொடி, தலை​வர்​கள் படம் ஆகிய​வற்​றுடன் நோட்​டீஸ் விநி​யோகம் செய்து வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வரு​கின்​றனர். இது திமுக​வினரை கடும் அதிருப்​தி​யடையச் செய்​துள்​ளது.

          

இந்நிலையில், ராஜ்பவன் தொகு​தி​யில் போட்​டி​யிடும் போட்டி காங்​கிரஸ் வேட்​பாளர் குமரனிடம், ‘‘மாநிலத் தலை​வர் உத்​தர​வின் பேரில், நீங்​கள் தேர்​தலில் பிரச்​சா​ரம் செய்​யாமல் ஒதுங்​கு​வீர்​களா?’’ என்று கேட்​டதற்​கு, ‘‘ராகுல் காந்​திக்கு திரு​மணம் நடந்​தால்​தான், நான் வாபஸ் பெறு​வேன்’’ என்று கிண்​டலாக கூறி பிரச்​சா​ரத்தை தொடர்ந்​தார்.

அதே​போல் காங்​கிரஸின் முன்​னாள் அமைச்​சர் ஷாஜ​கான் தொடங்கி பலரும் திமுக தொகு​தி​யில் பிரச்​சா​ரம் செய்​கின்​றனர். இப்​பிரச்​சினை​யில் என்ன செய்​வது என்று தெரி​யாமல் காங்​கிரஸ் தலை​வர் வைத்​திலிங்​கம் திகைத்து நிற்​கிறார்.

SCROLL FOR NEXT