தமிழகம்

“எனக்கு எல்லா கட்சியிலும் ரசிகர்கள் உள்ளதால்...” - வாக்களித்த பின் நடிகர் சிம்பு கருத்து

வெற்றி மயிலோன்

சென்னை: “தேர்தலில் மாற்றம் வரவேண்டுமா, இல்லையா என்பதை நான் முடிவு செய்ய முடியாது. மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. நான் ஒரு நடிகனாக இருக்கிறேன். எனக்கு எல்லா கட்சியிலும் ரசிகர்கள் உள்ளனர். எனவே, ஒரு சார்பாக எந்த கருத்தையும் சொல்ல முடியாது” என நடிகர் சிலம்பரசன் தெரிவித்தார்.

சென்னை தி.நகரில் நடிகர் சிலம்பரசன் இன்று வாக்களித்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ அனைவரும் வாக்களிக்கும்படி நேற்று ட்வீட் போடலாம் என்று இருந்தேன். ஆனால், இந்த தேர்தல் ஒரு வித்தியாசமானதாக இருப்பதால், அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளனர். அதனையே நல்ல மாற்றமாக நான் பார்க்கிறேன். தேர்தலில் மாற்றம் வரவேண்டுமா, இல்லையா என்பதை நான் முடிவு செய்ய முடியாது. மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நான் ஒரு நடிகனாக இருக்கிறேன். எனக்கு எல்லா கட்சியிலும் ரசிகர்கள் உள்ளனர். எனவே ஒரு சார்பாக எந்த கருத்தையும் சொல்ல முடியாது. அவரவருக்கு பிடித்தவருக்கு ஓட்டு போட போகிறார்கள்.

இந்த தேர்தலில் ஓட்டு போட்டே ஆகவேண்டும் என அபரிமிதமான ஆர்வம் தெரிகிறது. மே 4-ஆம் தேதி பார்ப்போம். இந்த முறை இளைஞர்கள் அதிகம் வாக்களிப்பது நல்ல விஷயம்தான். என் அப்பா டி.ஆர் சொன்னது அவரது கருத்து. நான் வேறு, அவர் வேறு. மக்கள் தெளிவாக உள்ளார்கள். அவர்கள் சரியானவர்களையே தேர்ந்தெடுப்பார்கள் என நம்புகிறேன்” என்றார்.

SCROLL FOR NEXT