பேரணிக்கு தலைமை வகித்து அண்ணாமலை பேசினார். மறைந்த நடிகர் விவேக்கின் மனைவி அருள்செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

 
தமிழகம்

பின்வாசல் வழியாக அதிகாரத்துக்கு வர எனக்கு விருப்பமில்லை: அண்ணாமலை

செய்திப்பிரிவு

சென்னை: அமைச்​சர்​கள் டெண்​டர்​களில் ஊழல் செய்ய தொடங்கி விட்​டார்​கள் எனவும், அதுதொடர்​பான ஆடியோ ஆதா​ரம் தன்​னிடம் இருப்​ப​தாக​வும் வீ த லீடர்ஸ் அமைப்​பின் தலை​வர் அண்​ணா​மலை தெரி​வித்​துள்​ளார்.

சுற்​றுச்​சூழல் பாது​காப்பை வலி​யுறுத்தி ‘வீ த லீடர்​ஸ்’ அமைப்பு சார்​பில் சென்னை எழும்​பூர் ராஜரத்​தினம் மைதானம் அருகே நேற்று பிரம்​மாண்ட விழிப்​புணர்வு பேரணி நடை​பெற்​றது. இந்த நிகழ்ச்​சிக்கு அமைப்​பின் தலை​வர் அண்​ணா​மலை தலைமை தாங்​கி​னார்.

இதில் சிறப்பு விருந்​தின​ராக மறைந்த நடிகர் விவேக்​கின் மனைவி அருள்​செல்வி கலந்​து​கொண்​டார். மேலும், நிர்​வாகி​கள் கரு.​நாக​ராஜன், மனோகர், சாய் சத்​யன், நாச்​சி​யப்​பன், சுமதி வெங்​கடேசன், அமர்​பிர​சாத் ரெட்டி உள்​ளிட்ட ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோர் பங்​கேற்​றனர்.

நிகழ்ச்​சி​யில் அண்​ணா​மலை பேசி​ய​தாவது: வீ த லீடர்ஸ் அமைப்பு தொடங்​கப்​பட்ட 73 நாட்​களில் 20 லட்​சம் பேர் இணைந்​துள்​ளனர். எங்​களது இலக்கு 50 லட்​சம் உறுப்​பினர்​கள். அந்த எண்​ணிக்​கையை எட்​டிய​வுடன், இதை ஒரு அரசி​யல் கட்​சி​யாக மாற்றி மக்​களுக்​கான அரசி​யலை முன்​னெடுப்​போம்.

எங்​களது அரசி​யல் என்​பது டெல்​லி​யிலோ அல்​லது போயஸ் கார்​டன், பனையூர், கோபாலபுரத்​திலோ அமர்ந்து முடி​வெடுக்​கும் அரசி​ய​லாக இருக்​காது. ஒவ்​வொரு கிராமத்​தி​லும், நகரத்​தி​லும் அமர்ந்து முடி​வெடுக்க வேண்​டும் என்​பதே எங்​களது நோக்​கம்.

தமிழகத்​தில் தற்​போது புதிய முதல்​வர் தலை​மை​யில் ஆட்சி நடக்​கிறது. பல எம்​எல்​ஏ-க்​கள் முதல்​முறை​யாகச் சட்​டப்​பேர​வைக்​குச் சென்​றுள்​ளனர். அவர்​களுக்கு ஒரு ஆண்டு காலம் அவகாசம் கொடுப்​போம். அவர்​கள் சிறப்​பாகச் செயல்​படட்​டும்.

தவறுகள் நடக்​கும்​போது நிச்​ச​யம் தட்​டிக்​கேட்​போம். தற்​போது தமிழக பட்​ஜெட்​டில் சேமிக்​கப்​பட்​டுள்ள 15 ஆயிரம் கோடி ரூபா​யில், நீர்​நிலை மேம்​பாடு, அரசுப் பள்ளி தரம் உயர்த்​துதல் மற்​றும் கிராமப்​புற வளர்ச்​சிக்கு முதல்​வர் ஒதுக்க வேண்​டும்.

தவெக அமைச்​சர்​கள் சிலர் டெண்​டர்​களில் ஊழல் செய்​யத் தொடங்​கி​யுள்​ளனர். அதற்​கான ஆடியோ ஆதா​ரங்​கள் என்​னிடம் உள்​ளன. முதல்​வர் விஜய் தனது அமைச்​சர்​களுக்​குக் கடி​வாளம் போட வேண்​டும். என்னை இப்​போதும் பாஜக​வின் ‘பி-டீம்’ என்று விமர்​சிக்​கிறார்​கள்.

அமித் ஷா என்னை டெல்​லிக்கு அழைத்​து, டெல்​லி​யில் பொறுப்​பேற்​கச் சொன்​னார். ஆனால் நான் தமிழகத்​திலேயே இருந்து பணி​யாற்ற விரும்​பு​கிறேன் என்று கூறி​விட்​டேன். நான் எப்​போதும் ஒரு கொள்​கை​யுடன்​தான் அரசி​யல் செய்​கிறேன்.

பின்​வாசல் வழி​யாக அதி​காரத்​துக்கு வர எனக்கு விருப்​பமில்​லை. மக்​களால் தேர்ந்​தெடுக்​கப்​பட்டு நேர்​மை​யான மாற்​றத்தை ஏற்​படுத்​து​வதே எனது லட்​சி​யம்.

கர்​நாட​கா​வில் மேகே​தாட்டு அணை கட்​டு​வதை ‘வி த லீடர்​ஸ்’ கடுமை​யாக எதிர்க்​கிறது. காவிரி விவ​காரத்​தில் தமிழகத்​தின் உரிமை​கள் காக்​கப்பட வேண்​டும். இரு மாநில முதல்​வர்​களை​யும் அழைத்து பிரதமர் பேச்​சு​வார்த்தை நடத்த வேண்​டும்.

2029 தேர்​தலில் ஜென்ஸி இளைஞர்​களின் பங்கு அதி​க​மாக இருக்​கும். பழைய பாணி தனி​நபர் விமர்சன அரசி​யலை விடுத்​து, வேலை​வாய்ப்பு மற்​றும் அடிப்​படை மாற்​றங்​களை முன்​னிறுத்​தும் அரசி​யலையே இளைஞர்​கள்​ எதிர்​பார்க்​கின்​றனர்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

SCROLL FOR NEXT