சு.வெங்கடேசன் எம்.பி.

 
தமிழகம்

எனக்கு சொந்தமாக கார் எதுவுமில்லை: சு.வெங்கடேசன் எம்.பி. விளக்கம்

செய்திப்பிரிவு

மதுரை: எனக்கு சொந்​த​மாக கார் எது​வும் இல்லை என்று சு.வெங்​கடேசன் எம்,பி தெரி​வி்த்​துள்​ளார்.

இது​குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்​கத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: நான் ரயில் நிலை​யத்​துக்கு வந்​திறங்​கிய கார் குறித்து விமர்​சிக்​கப்​ பட்​டிருக்​கிறேன். இத்​தகைய விமர்​சனங்​கள் உண்​மையைச் சரி பார்க்​காமல், மேலோட்​ட​மான அவ​தானிப்பின் அடிப்​படை​யில் முன் வைக்​கப்​படும்​போது, அவை ஒரு சார்பு நிலையை வெளிப்​படுத்​து​வதுடன், தனி நபர் தாக்​குதலாகவும் மாறுகிறது. அது என் காரும் இல்லை; எனக்கு இன்று வரை சொந்​தக் கார் எது​வும் இல்லை.

நாடாளு​மன்ற உறுப்​பினருக்​கான பயண உரிமை சார்ந்​ததே எனது ரயில் பயணம். முதல் வகுப்​பில் பயணிப்​ப​தால் ஒரு​வரின் கருத்து தவறாகி விடாது; ஸ்​லீப்​பர் வகுப்​பில் பயணிப்​ப​தால் ஒரு​வர் சொல்​வது சரியாகி விடாது.

பாவ புண்​ணி​யத்​துக்​கும், பகுத்​தறி​வுக்​குமான போராட்​டத்​தில் நாங்​கள் நிற்​கும் தரப்​புக்​காக பெரு​மையோடு என்​றும் முன்​நிற்​போம். ஏனெனில் இந்​தப் போராட்​டம் எங்​களோடு தொடங்​கியதும் இல்லை; எங்​களோடு முடியப் போவதும் இல்லை. இவ்​வாறு குறிப்​பிட்​டுள்​ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT