சென்னை: ‘மாற்றுத் திறனாளிகள் குறித்து மரியாதைக் குறைவாக பேச வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஒருபோதும் இல்லை. மாற்றுத் திறனாளி தாய்க்கு பிறந்த மகள்தான் நான்; அந்த வலியும் வேதனையும் எனக்கும் உள்ளது’ என்று தவெக அமைச்சர் கீர்த்தனா தான் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அண்மையில் நான் தெரிவித்த கருத்துகள் சிலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருப்பதை அறிகிறேன். மாற்றுத் திறனாளிகள் குறித்து மரியாதைக்குறைவாக பேச வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஒருபோதும் இல்லை. மாற்றுத் திறனாளி தாய்க்கு பிறந்த மகள் தான் நான். அந்த வலியும் வேதனையும் எனக்கும் உள்ளது.
அறியாமல் செய்த தவறை அரசியலாக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய வார்த்தைகள் யாருடைய மனதையும் புண்படுத்தியிருந்தால், அதற்காக மனமார்ந்த வருத்தத்தையும் மன்னிப்பையும் தெரிவித்துக்கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சமீபத்தில் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சிவகாசி சட்டப்பேரவை உறுப்பினரும், தவெக அமைச்சருமான கீர்த்தனா, மாற்றுத் திறனாளிகள் குறித்து அவர் பயன்படுத்திய வார்த்தை பெரும் கண்டனத்துக்குள்ளானது.