தமிழகம்

பணி மூப்பின்படி பதவி உயர்வு வழங்கக் கோரி உண்ணாவிரதம்: நூற்றுக்கும் மேற்பட்ட வணிகவரித் துறை அலுவலர்கள் கைது

செய்திப்பிரிவு

சென்னை: பணி மூப்​பின்​படி பதவி உயர்வு வழங்க வேண்​டும் என்​பது உள்​ளிட்ட பல்​வேறு கோரிக்​கைகளை வலி​யுறுத்​தி, உண்​ணா​விரத போராட்​டத்​தில் ஈடு​பட்ட தமிழ்​நாடு வணி​கவரித் துறை அலு​வலர்​கள் 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்​யப்​பட்​டனர்.

சென்​னை, நந்​தனத்​தில் உள்ள வணி​கவரித் துறை தலைமை அலு​வலக வளாகத்​தில், தமிழ்​நாடு வணி​கவரித் துறை ஒன்​றி​யம் சார்​பில், உண்​ணா​விரதப் போராட்​டம் நேற்று நடை​பெற்​றது.

சங்​கத்​தின் தலை​வர் ஆலிஸ் ஷீலா தலை​மை​யில் 500-க்​கும் மேற்​பட்​டோர் கலந்து கொண்​டனர். அவர்​கள், "வணி​கவரித் துறை​யில் பணி மூப்​பின் அடிப்​படை​யில், உதவி​யாளர்​களுக்கு உடனடி​யாகத் துணை வணி​கவரி அலு​வலர் பதவி உயர்வு வழங்க வேண்​டும்.

துறை​யில் உள்ள காலிப் பணி​யிடங்​களை நிரப்​பும் போது மூன்​றில் ஒரு பங்கு இடங்​களை மட்​டுமே டிஎன்​பிஎஸ்சி மூலம் நிரப்ப வேண்​டும். மற்ற காலி இடங்​களுக்​கு பணி மூப்​புப் பட்​டியலில் உள்ள உதவி​யாளர்​களுக்​குப் பதவி உயர்வு வழங்க வேண்​டும்.

அனைத்​துக் காலிப் பணி​யிடங்​களை​யும் டிஎன்​பிஎஸ்சி மூல​மாகவே நிரப்ப அரசு திட்​ட​மிட்டு வரு​வது பாதிப்பை ஏற்​படுத்​தும். துணை மாநில வரி அலு​வலர் பதவி உயர்​வுக்​கான பட்​டியல் வெளி​யிடப்​பட்டு ஓராண்டு கால​மாகி​யும், இன்​ன​மும் பணி​யிடம் ஒதுக்​கப்​ப​டா​மல் உள்ள 308 பேருக்கு உடனடி​யாகப் பணி​யிடங்​களை ஒதுக்​கீடு செய்ய வேண்​டும்.

இதுத​விர, 1981-ம் ஆண்​டிலிருந்து வெளி​யிடப்​பட்ட பணி மூப்​புப் பட்​டியலின் அடிப்​படை​யில், உதவி ஆணை​யர் மற்​றும் மாநில வரி அலுவலர் பதவி உயர்​வுப் பட்​டியல்​களைத் தகுந்த முறை​யில் திருத்தி வெளி​யிட வேண்​டும்" என வலி​யுறுத்​தப்​பட்​டது.

போராட்​டம் தீவிரமடைந்​ததைத் தொடர்ந்​து, அரசுத் தரப்​பில் அதி​காரி​கள் ஊழியர் சங்​கப் பிர​தி​நி​தி​களு​டன் பேச்​சு​வார்த்தை நடத்​தினர். அப்​போது, கோரிக்​கைகளை நிறைவேற்​றக் கால அவகாசம் தேவைப்​படு​வ​தால் உண்​ணா​விரதப் போராட்​டத்​தைக் கைவிடு​மாறு அரசுத் தரப்​பில் கேட்​டுக் கொள்​ளப்​பட்​டது.

எனினும், ஏற்​க​னவே பலமுறை அரசுத் தரப்​பில் இதே​போல உறு​தி​யளித்​தும் எந்​த​வித நடவடிக்​கை​யும் எடுக்​கவில்லை என்று கூறி, அதி​காரி​கள் கொடுத்த கால அவகாசத்தை ஏற்க மறுத்து ஊழியர்​கள் போராட்​டத்​தைத் தொடர்ந்​தனர்.

இதையடுத்​து, பாது​காப்​புப் பணி​யில் இருந்த போலீ​ஸார் போராட்​டத்​தில் ஈடு​பட்​ட​வர்​களை கைது செய்​தனர். தங்​களது கோரிக்​கைகள் முழு​மை​யாக நிறைவேறும் வரை, இன்​றும் தங்​களது உண்​ணா​விரதப் போ​ராட்​டத்​தைத் தொடரப் போவ​தாகத்​ துறை ஊழியர்​கள்​ தெரி​வித்​தனர்​.

SCROLL FOR NEXT