தமிழகம்

நாகர்கோவிலில் பிரதமர் மோடி ரோடு ஷோ - எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு

வெற்றி மயிலோன்

நாகர்கோவில்: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு திரட்டும் விதமாக பிரதமர் மோடி இன்று நாகர்கோவிலில் ரோடு ஷோ மேற்கொண்டார். இதில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பங்கேற்றார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலுக்காக தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, அதிமுக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க பிரதமர் மோடி இன்று நாகர்கோவில் வந்தார்.

          

இதற்காக, இன்று பிற்பகல் 3.30 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டார் பிரதமர் மோடி. மாலை 4.10 மணிக்கு நாகர்கோவிலில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட்டில் அவரின் ஹெலிகாப்டர் வந்திறங்கியது. தொடர்ந்து, அங்கிருந்து புறப்பட்டு, வெப்பமூடு சந்திப்புக்கு பிரதமர் காரில் வந்த பிரதமர் மோடி, வெப்பமூடு சந்திப்பில் இருந்து பிரதமர் மோடி ரோடு ஷோ மேற்கொண்டார்.

பிரதமர் மோடியின் ரோடு ஷோவில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக முன்னாள் தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பிரதமர் மோடி ரோடு ஷோ மேற்கொண்டபோது இருபுறமும் திரண்டிருந்த தொண்டர்கள், மலர்களை தூவி வரவேற்றனர். இதனையடுத்து மக்களிடம் பிரதமர் மோடி ஆதரவு திரட்டினார்.

SCROLL FOR NEXT