தமிழகம்

ஒப்பந்ததாரரின் ஆடியோ வெளியான நிலையில் வீட்டு வசதி வாரியம் வெளியிட்ட ரூ.33 லட்சம் டெண்டர் ரத்து

செய்திப்பிரிவு

சென்னை: வீட்​டு​வசதி வாரி​யத்​தில் குறிப்​பிட்ட நபர்​களுக்கு மட்​டும் முக்​கி​யத்​து​வம் அளிப்​ப​தாக அதி​காரி​யுடன் ஒப்​பந்​த​தா​ரர் பேசிய ஆடியோ வெளி​யான நிலை​யில் டெண்​டரை ரத்து செய்து வாரி​யம் உத்​தர​விட்​டுள்​ளது.

சென்னை அசோக் நகரில் தமிழ்​நாடு வீட்டு வசதி வாரி​யம் சார்​பில் 22 தளங்​கள் கொண்ட அடுக்​கு​மாடி குடி​யிருப்பு கட்​டப்​பட்டு வரு​கிறது.

இதில் ஒவ்​வொரு வீட்​டுக்​கும் பெயர்ப் பலகை வைக்​கும் பணிக்​காக ரூ.33 லட்​சம் மதிப்​பிலான டெண்​டர் கடந்த 15-ம் தேதி அறிவிக்​கப்​பட்​டு, ஆக.20-ம் தேதிக்​குள் (இன்​று) விண்​ணப்​பிக்​கு​மாறு கூறப்​பட்​டிருந்​தது.

குறை​வான அவகாசமே இருந்​த​தால், பல ஒப்​பந்​த​தா​ரர்​கள் விண்​ணப்​பிக்க முடி​யாத நிலை ஏற்​பட்​டது. இதுதொடர்​பாக சம்​பந்​தப்​பட்ட அதி​காரி​யிடம் செல்​போனில் தொடர்பு கொண்ட ஒப்​பந்​த​தாரர் ஒரு​வர், “வெறும் 5 நாட்​களில் எப்​படி டெண்​டர் விண்​ணப்​பிக்க முடி​யும்.

அதே​போல, விண்​ணப்​பிப்​ப​தற்​கான அதி​காரப்​பூர்வ இணை​யதளம் பயன்​படுத்த முடி​யால் உள்​ளது” என்று கூறி​யுள்​ளார்.

“குறிப்​பிட்ட சிலர் மட்​டும்​தான் விண்​ணப்​பிக்க முடி​யும்” என்று அதி​காரி கூற, “வெளிப்​படைத் தன்​மை​யுடன் ஒப்​பந்​தப் புள்​ளி​கள் நடை​பெறும் என அரசு தெரி​வித்​துள்​ளதே” என்று அந்த ஒப்​பந்​த​தா​ரர் கேட்​கிறார்.

இந்த போன் உரை​யாடல் ஆடியோ சமூக வலை​தளங்​களில் வைரலானது. போ​திய அவகாசம் இல்லை இந்​நிலை​யில், “போ​திய அவகாசம் இல்​லாதது மற்​றும் நிர்​வாக காரணங்​களுக்​காக பெயர்ப் பலகைக்​கான டெண்டர் ரத்து செய்​யப்​படுகிறது” என்று வீட்டு வசதி வாரி​யம் அறி​வித்துள்ளது.

SCROLL FOR NEXT