தமிழகம்

வணிக சிலிண்டர் நிறுத்தம்: புதுச்சேரியில் ஹோட்டல்கள் மூடப்படுவதாக அறிவிப்பு

செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: வணிக சிலிண்டர் நிறுத்தத்தால் புதுச்சேரியில் ஹோட்டல்கள் மூடப்படும் என ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

ஈரான் மீதான அமெரிக்க, இஸ்ரேல் போர் காரணமாக புதுச்சேரியில் வர்த்தக ரீதியிலான சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. கையிருப்பில் உள்ள சிலிண்டர்கள் இன்னும் ஓரிரு நாட்கள் மட்டுமே வரும் என்பதால் ஹோட்டல்களுக்கு வர்த்தக ரீதியிலான சிலிண்டர்கள் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.

          

சுற்றுலா நகரான புதுவையில் 700-க்கும் மேற்பட்ட ஹோட்டல்கள் உள்ளன. அத்துடன் ஏராளமான சாலையோர உணவகங்களும் இயங்குகின்றன. சுற்றுலா பயணிகள் பெரிய ஹோட்டல்கள் தொடங்கி சிறிய ஹோட்டல்களை நம்பி புதுச்சேரி வருகின்றனர்.

தற்போது வணிக சிலிண்டர் நிறுத்தம் தொடர்பாக ஹோட்டல் உரிமையாளர் சங்கம் தலைவர் பாஸ்கரனிடம் கேட்டதற்கு, “புதுச்சேரியிலுள்ள 700-க்கும் மேற்பட்ட ஹோட்டல்களுக்கு நாள்தோறும் 1000-க்கும் மேற்பட்ட வணிக சிலிண்டர்கள் தேவை.

சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டாதால் நாளை (மார்ச் 11) முதல் படிப்படியாக ஹோட்டல்கள் மூடப்படும்” என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT