தமிழகம்

குதிரை பேரம், டாஸ்மாக் முறைகேடு வழக்கு: விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: ஊத்​தங்​கரை தவெக எம்​எல்ஏ இளை​ய​ராஜா​விடம் குதிரை பேரத்​தில் ஈடு​பட்​ட​தாக திமுக முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி, அவரது சகோ​தரர் அசோக்​கு​மார் மற்​றும் அரும்​பாக்​கம் திரு​நாவுக்​கரசு, திருச்சி நரேஷ், மேட​வாக்​கம் தியாக​ராஜன், கரூர் கார்த்​திக், சேது​ராஜ், ரமேஷ் உள்​ளி்ட்​டோர் மீது திரு​வல்​லிக்​கேணி போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்​திருந்​தனர்.

இந்த வழக்கை சிபிஐக்கு மாற்​றக்​கோரி தாக்​கல் செய்​யப்​பட்ட மனுவை விசா​ரித்த உயர் நீதி​மன்​றம், வழக்கு விசா​ரணைக்கு இடைக்​காலத் தடை விதித்து உத்​தர​விட்​டுள்​ளது. இதே​போல, டாஸ்​மாக் முறை​கேடு தொடர்​பான வழக்​குக்கும் உயர் நீதி​மன்​றம் இடைக்​கால தடை விதித்​திருந்​தது.

இந்த இரு வழக்​கு​களும் தலைமை நீதிபதி எஸ்​.ஏ. தர்​மா​தி​காரி மற்​றும் நீதிபதி ஜி. அருள்​முரு​கன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தன.

அப்​போது, இரு வழக்​கு​களி​லும் இடைக்​காலத் தடையை வரும் நவ.23 வரை நீட்​டித்து உத்​தர​விட்​டுள்​ளனர்.

SCROLL FOR NEXT