திருப்பரங்குன்றம் தீபத்தூண் | கோப்புப் படம்

 
தமிழகம்

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற இந்து முன்னணி வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

கோவை: இந்து முன்​னணி​யின் மாநில தலை​வர் காடேஸ்வரா சி.சுப்​பிரமணி​யம் கோவை​யில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: திருப்​பரங்​குன்​றம் மலை உச்​சி​யில் தீபத்​தூணில் தீபம் ஏற்​றலாம் என்ற சென்னை உயர் நீதி​மன்​றத்​தின் மதுரை அமர்வு வழங்​கிய தீர்ப்பை தமிழக அரசு நடைமுறைப்​படுத்த வேண்​டும். கடந்த திமுக ஆட்​சி​யில் நீதி​மன்ற உத்​தரவு அமல்​படுத்​தப்​படாததால், நீதி​மன்ற அவ​மதிப்பு நட​வடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்​டன. உயர் அதி​காரி​கள் நீதி​மன்​றத்​தில் மன்​னிப்பு கோர வேண்​டிய சூழல் உரு​வானது.

தீபத் தூணில் தீபம் ஏற்​று​வதற்கு நீதி​மன்ற உத்​தரவை அமல்​படுத்த வேண்டி, வரும் 18-ம் தேதி திருப்​பரங்​குன்​றத்​தில் ஆன்​மிகப் பெரிய​வர்​கள் மற்​றும் முருக பக்​தர்​கள் பங்​கேற்​கும் மாபெரும் ஆர்ப்​பாட்​டம் நடை​பெறும். இவ்​வாறு அவர் கூறினார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT