தமிழகம்

ரயில்களில் தூங்கும் நேரம்: விதிகளை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த பாலசுப்​பிரமணி​யன் என்​பவர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனுவில், ‘உடல்​நலம் சரி​யில்​லாத எனது மனைவியுடன் முன்​ப​திவு செய்த படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்​டி​யில் பயணித்​தேன்.

ஆனால் படுக்கை வசதியை இரவு 10 முதல் காலை 6 மணி வரை மட்​டுமே பயன்​படுத்த முடியும் என்ற விதி காரண​மாக எனது மனைவி அந்த காலநேரத்தை தாண்டி படுக்கை வசதியை பயன்​படுத்த சக பயணிகள் அனுமதிக்​க​வில்லை.

இத​னால் எனது மனைவி உடல் ரீதி​யாகவும், மன ரீதி​யாகவும் அவதி​யடைந்​தார். எனவே ரயில்வே வணிக கையேட்​டில் உள்ள விதி​களை ரத்து செய்ய வேண்​டும்’ எனக் கோரி​யிருந்​தார். இந்த வழக்கை விசா​ரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்​மாதி​காரி மற்​றும் நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் அடங்​கிய அமர்வு பிறப்​பித்​துள்ள உத்​தர​வில், “தனிப்​பட்ட சம்​பவத்​தைக் காரணம் காட்டி அனைத்து பயணிகளின் வசதிக்​காக ரயி்ல்வே நிர்​வாகம் கொண்டு வந்​துள்ள விதி​களை ரத்து செய்ய முடி​யாது.

அதேநேரம் உடல்​நலம் பாதிக்​கப்​பட்​ட​வர்​கள், மாற்​றுத்​திறனாளி​கள் மற்​றும் கர்ப்​பிணி பெண்​களுக்கு படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்​டிகளில் அவர்​களுக்​கான வசதி​கள் முறை​யாக கிடைப்​பதை ரயில்வே நிர்​வாகம் உறுதி செய்ய வேண்​டும். மனுதா​ரர் புகார் தெரி​வித்து இருந்​தால் அதன்​மீது மேல் நட​வடிக்கை எடுக்​கும்​படி ரயில்வே நிர்​வாகத்தை கோரலாம்”என உத்​தர​விட்டு வழக்கை முடித்து வைத்​துள்​ளனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT