உயர் நீதிமன்ற மதுரை அமர்வு

 
தமிழகம்

அறங்காவலர் பதவி உயர்வு விண்ணப்பங்களை வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

மதுரை: கோயில் அறங்​காவலர்​கள் பத​விக்​கான விண்​ணப்​பங்​களை வலை​தளத்​தில் பதிவேற்​றம் செய்​யும் வகை​யில் விதி​களில் திருத்​தம் செய்​யவோ அல்​லது புதிதாக விதி​களை உரு​வாக்​கவோ தமிழக அரசு நட​வடிக்கை எடுக்க வேண்​டும் என உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது.

தூத்​துக்​குடி மாவட்​டம் திருச்​செந்​தூரைச் சேர்ந்த ராம்​குமார் ஆதித்​தன், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு: கோயில்​களில் அறங்​காவலர்​கள் பத​விக்கு விண்​ணப்​பிப்​போரின் விண்​ணப்​பங்​கள், அவர்​கள் தொடர்​பான அனைத்து ஆவணங்​களும் அறநிலை​யத்​துறை வலை​தளத்​தில் பதிவேற்​றம் செய்​யப்​பட வேண்​டும். அதே போல் அறங்​காவலராகத் தேர்வு செய்​யப்​பட்​ட​வர் எதற்​காக தேர்வு செய்​யப்​பட்​டார் என்ற காரணத்தை வெளிப்​படை​யாகத் தெரி​விக்க வேண்​டும்.

எனவே, கோயில் அறங்​காவலர் தேர்வு, நியமன உத்​தரவு​களை அறநிலை​யத்​துறை மற்​றும் சம்​பந்​தப்​பட்ட கோயில்​களின் வலை​தளத்​தில் வெளி​யிட​வும், அறங்​காவலர் நியமன உத்​தரவு வலை​தளத்​தில் பதிவேற்​றம் செய்​யப்​பட்ட நாளி​லிருந்து நியமனத்​துக்கு எதிராக மேல்​முறையீடு செய்​வதற்​கான காலக்​கெடு நிர்​ணயம் செய்​ய​வும் உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனுவில் கூறப்​பட்​டிருந்​தது.

இந்த மனு நீதிப​தி​கள் பி.வேல்​முருகன், பி.முருகன் அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. அறநிலை​யத்​துறை சார்​பில், அறங்​காவலர்​கள் பத​விக்​கான விண்​ணப்​பங்​களை வலை​தளத்​தில் பதிவேற்​றம் செய்ய விதி​களில் இடம் இல்லை எனக் கூறப்​பட்​டது.

பின்​னர் நீதிப​தி​கள், அறங்​காவலர்​கள் கோயில் பணம், சொத்து, நகைகளை அபகரித்​த​தாகச் செய்​தி​கள் உள்​ளன. கோயில் சொத்​துகளை விற்​பனை செய்​தும் உள்​ளனர். இத​னால் அறங்​காவலர் தேர்வு நேர்​மையாகவும், வெளிப்​படை​யாகவும் நடை​பெற வேண்​டும். அறங்​காவலர்​கள் பத​விக்கு விண்​ணப்​பிப்​போரின் விண்​ணப்​பங்​கள் மக்​கள் பார்​வை​யிட வசதி​யாக பொது​வெளி​யில் பதி​விட்​டால்​தான் விண்​ணப்​பித்​தோர் பற்​றிய தகவல்​கள் தெரி​வித்து பொது​மக்​கள் ஆட்​சேபம் இருந்​தால் தெரி​விக்க முடியும்.

அரசிடம் அறங்​காவலர் பற்​றிய அனைத்​துத் தகவல்​களும் இருக்​காது. எனவே, அறங்​காவலர் விண்​ணப்​பங்​கள், அறங்​காவலர் தேர்​வுக்​கான காரணங்​கள் மற்​றும் அறங்​காவலரை தேர்வு செய்த அரசு உத்​தரவை வலை​தளத்​தில் பதிவேற்​றம் செய்​யும் வகை​யில் விதி​களில் திருத்​தம் அல்​லது புதிய விதி​கள் வகுக்க வேண்​டும். மனு முடிக்​கப்​படு​கிறது என உத்​தர​விட்​டனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT