தமிழகம்

தமிழக மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம்: ஐகோர்ட் உத்தரவு

செய்திப்பிரிவு

மதுரை: மின்வாரிய ஒப்​பந்த தொழிலா​ளர்​களை பணிநிரந்​தரம் செய்​யும் தொழிலா​ளர் ஆய்​வாளரின் உத்​தர​வுக்கு எதி​ராக மின்வாரி​யம் தாக்​கல் செய்த மேல்​முறை​யீடு மனுக்​களை உயர் நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்து உத்​தர​விட்​டது. நீதி​மன்​றத்​தின் இந்த உத்​தர​வால் தொழிலா​ளர் ஆய்​வாளர் வழங்​கிய பணிநிரந்தர ஆணை​கள் உறுதி செய்​யப்​பட்​டுள்​ளன.

மதுரை, தேனி, தூத்​துக்​குடி, விருதுநகர், திண்​டுக்​கல் உள்​ளிட்ட மாவட்​டங்​களில் மின்​சார வாரி​யத்​தில் குழி தோண்​டு​தல், மின்​கம்​பிகள் அமைத்​தல், பழுது நீக்​குதல் உள்​ளிட்ட அத்​தி​யா​வசி​யப் பணி​களில் 1998 முதல் 2014 வரை ஈடு​படுத்​தப்​பட்ட ஒப்​பந்​தத் தொழிலா​ளர்​கள் பணிநிரந்​தரம் கோரி தொழிலா​ளர் ஆய்​வாளரிடம் மனு அளித்​தனர்.

இதை விசா​ரித்த தொழிலா​ளர் ஆய்​வாளர், ஒப்​பந்​தத் தொழிலா​ளர்​கள் மின்வாரி​யத்​தில் 24 மாதங்​களில் 480 நாட்​கள் தொடர்ந்து பணி​யாற்றி இருப்​ப​தால் அவர்​களை பணி நிரந்​தரம் செய்ய வேண்​டும் என உத்​தர​விட்​டது.

இதை எதிர்த்​து, மின்வாரி​யம் சார்​பில் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மேல்​முறை​யீடு மனுக்​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டன. மனுக்​களை நீதிபதி பி.பு​கழேந்தி விசா​ரித்​தார். மின்​சார வாரி​யம் சார்​பில், ஒப்​பந்​தத் தொழிலாளர்கள் நேரடி​யாக வாரி​யத்​தால் பணி​யமர்த்​தப்​பட​வில்​லை.

அவர்​கள் ஒப்​பந்​த​தா​ரர்​கள் மூலமே நியமிக்​கப்​பட்​டனர். பணிநிரந்​தரம் கோரும் தொழிலா​ளர்​கள் தொழிலா​ளர் நீதி​மன்​றத்தை தான் அணுக வேண்​டும். தொழிலா​ளர் ஆய்​வாள​ருக்கு இதற்கு அதி​காரம் இல்​லை.

இவர்​கள் கட்​டு​மானப் பணி​களில் ஈடு​பட்​ட​தால் இவர்​களுக்கு பணிநிரந்​தரச் சட்​டம் பொருந்​தாது என தெரிவிக்​கப்​பட்​டது. பின்​னர் நீதிபதி பிறப்​பித்த உத்​தர​வு: பணிநிரந்​தரச் சட்​டத்​தின்​படி, ஒரு தொழிலா​ளர் 480 நாட்​கள் பணி​யாற்​றி​னாரா என்​பதை ஆய்வு செய்​து, அவருக்​குப் பணி நிரந்​தரம் வழங்​கத் தொழிலா​ளர் ஆய்​வாள​ருக்கு முழு அதி​காரம் உண்​டு.

தொழிலா​ளர்​கள் மேற்​கொண்ட குழி தோண்​டு​தல், மின் கம்​பம் நடு​தல் உள்​ளிட்ட பணி​கள் கட்​டு​மானப் பணி​கள் அல்ல, அவை மின்வாரி​யத்​தின்நிரந்​தர​மான மற்​றும் அத்​தி​யா​வசி​யப் பணி​கள் ஆகும்.

ஏற்​கெனவே இதே​போன்ற சூழலில் இருந்த ஒப்​பந்​தத் தொழிலா​ளர்​களுக்கு உச்ச நீதி​மன்​றம் மற்​றும் உயர் நீதி​மன்ற உத்​தர​வுப்​படி பணிநிரந்​தரம் வழங்​கப்​பட்​டது.

எனவே, இந்​தத் தொழிலா​ளர்​களுக்​கும் அதே பலனை வழங்​கு​வது அவசி​ய​மானது என தெரி​வித்​து, மேல்​முறை​யீட்டு மனுக்​கள் தள்​ளு​படி செய்​யப்​படு​கின்​றன. தொழிலா​ளர் ஆய்​வாளர் வழங்​கிய பணிநிரந்தர ஆணை​கள் உறுதி செய்​யப்​படு​கின்​றன. இவ்​வாறு நீதிபதி உத்​தர​வில்​ குறிப்​பிட்​டுள்​ளார்​.

SCROLL FOR NEXT