தமிழகம்

உயர் நீதிமன்ற கதவுகள் சம்பிரதாயத்துக்கு 1 நாள் மூடல்

செய்திப்பிரிவு

சென்னை: நீதி​மன்ற வளாகத்​தைப் பொது​மக்​கள் வழிப்​பாதையாகப் பயன்​படுத்​து​வதைத் தடுப்​ப​தற்​காக ஒவ்​வொரு ஆண்​டும் நவம்​பர் மாதத்​தில் ஒரு நாள் நீதி​மன்​றத்​தின் அனைத்து நுழைவு வாயில்​களை​யும் மூடும் நடைமுறை கடைபி​டிக்​கப்​பட்டு வரு​கிறது.

இந்த பாரம்​பரிய சம்​பிரதாயத்​தின் படி, சென்னை உயர் நீதி​மன்​றத்​தின் அனைத்து நுழைவு வாயில்​களும் நேற்று முன்​தினம் (நவ.14) இரவு 8 மணி முதல் நேற்று (நவ.15) இரவு 8 மணி வரை மூடப்​பட்​டிருந்​தன.

இந்த 24 மணி நேரத்​தில் வழக்​கறிஞர்​கள், பொது​மக்​கள் என யாரும் நீதி​மன்ற வளாகத்​துக்​குள் நுழைய அனுமதிக்​கப்​பட​வில்லை. இரவு 8 மணிக்​குப் பிறகு நீதி​மன்ற நுழைவாயில்​கள் வழக்​கம் போல் திறக்​கப்​பட்​டன.

இது நீதி​மன்ற விடு​முறை அறி​விப்பு மட்​டுமல்ல. பொது​மக்​கள் நீண்ட காலமாக ஒரு பாதையைப் பயன்​படுத்தி வந்​தால், எதிர்​காலத்​தில் அந்த பாதையை பயன்​படுத்​து​வதற்​கான உரிமையை முன்​வைக்​கக் கூடிய சூழல் உரு​வாகலாம்.

எனவே, நீதி​மன்ற வளாகத்​தின் மீதான உரிமையை யாரும் கோரி​விட கூடாது என்​ப​தற்​காக ஆண்​டுதோறும் இந்த சம்​பிரதாய நடைமுறை பின்​பற்​றப்​படு​கிறது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT